இந்த கடினமான நேரத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மக்களுடன் நின்று செயல்படுவதில் எந்தவித தாமதமும் இருக்கக் கூடாது. நமது மனிதநேயம், ஒற்றுமை, அர்ப்பணிப்பு ஆகியவை இந்த பேரிடர் சூழ்நிலையை சமாளிக்க மக்களுக்கு துணைநிலையாக இருக்கும்.
29/11/2025 அறிக்கை தமிழ்நாடு முழுவதும் டிட்வா புயல் கடுமையாகப் தாக்கி வரும் இந்த நேரத்தில், நமது மாநில மக்களின் பாதுகாப்பை விட மேலான ஒன்று எதுவுமில்லை என்பதை நான் வலியுறுத்திக் கூற விரும்புகிறேன். இந்த பேரிடர் சூழ்நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் அனைத்து நிர்வாகிகளும், தொண்டர்களும் அதிகமான விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். மக்கள் வசிக்கும் பகுதிகளில் புயலின் தாக்கம் மிகுந்திருப்பதை கருத்தில் கொண்டு, நான் அனைத்து மாவட்டத் தலைவர்களும், தொகுதி ...
தேர்தல் அரசியல் களம் சமநிலைத் தன்மையை இழந்து பா.ஜ.க. வெற்றி பெறுவதற்கு தேர்தல் பத்திர நன்கொடை திட்டம் பெரும் துணையாக இருக்கிறது. இதன்மூலம் பா.ஜ.க.வின் தேர்தல் பத்திர நன்கொடை ஊழல் அம்பலமாகியுள்ளது. இனியும் பா.ஜ.க.வினர் புனிதர் வேஷம் போடுவதை நாட்டு மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
29/11/2025 அறிக்கை ஒன்றிய பா.ஜ.க. ஆட்சி அமைந்ததும் பல்வேறு திட்டங்களில் சலுகைகள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. அத்தகைய சலுகைகளுக்கு கைமாறாக தேர்தல் பத்திரங்கள் மூலம் பா.ஜ.க.வுக்கு நன்கொடை குவிந்து வருகிறது. கடந்த 2019 முதல் 2024 ஆம் ஆண்டு வரை மொத்தம் 6,060 கோடி ரூபாய் நன்கொடையாக பா.ஜ.க. கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து பெற்றிருக்கிறது. இது கார்ப்பரேட் நிறுவனங்களின் மொத்த தேர்தல் பத்திர நன்கொடையில் 47.5 சதவிகிதமாகும். கடந்த ...
நாடு, மக்கள், ஜனநாயகம், குடியரசு – இவை அனைத்திற்கும் உயிரூற்றாகத் திகழ்வது அரசியலமைப்பே. அதன் உயரிய கொள்கைகள் மற்றும் அடிப்படை கட்டமைப்பு பாதுகாக்கப்பட வேண்டும்.
26/11/2025 அறிக்கை இந்திய அரசியலமைப்பு என்பது ஒரு சட்டப் புத்தகமாக மட்டுமே பார்க்கப்படக் கூடிய பொருள் அல்ல. இது இந்த நாட்டின் ஆன்மாவாகவும், மக்கள் ஆட்சியின் உயிரூற்றாகவும், ஒவ்வொரு குடிமகனின் உரிமைகளையும் சமத்துவத்தையும் பாதுகாக்கும் உயர்ந்த காவலனாகவும் திகழ்கிறது. மதம், மொழி, சாதி, சமூக பின்னணி, பொருளாதார நிலை, பாலினம் என்று எதுவாக இருந்தாலும், ஒவ்வொருவரும் சம உரிமையுடன் வாழ வேண்டும் என்ற சிந்தனையை உலகிற்கு முன் மிகத் தெளிவாக ...
விவசாயிகளின் விதைக்கு விலை நிர்ணயிக்கும் நடைமுறையே விவசாயத்தை அழித்து விதைகளுக்காக கார்ப்பரேட்களிடம் கையேந்துகிற நிலையை உருவாக்குவதே இச்சட்டத்தின் நோக்கமாக இருக்கிறது.
25/11/2025 அறிக்கை இந்திய விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் வகையில் ஒன்றிய பா.ஜ.க. அரசு விதை மசோதா - 2025-ஐ கொண்டு வருவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது. இந்த மசோதா குறித்து கருத்து கேட்பு டிசம்பர் 11 ஆம் தேதி முதல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. விவசாயிகளின் விதைக்கு விலை நிர்ணயிக்கும் நடைமுறையே விவசாயத்தை அழித்து விதைகளுக்காக கார்ப்பரேட்களிடம் கையேந்துகிற நிலையை உருவாக்குவதே இச்சட்டத்தின் நோக்கமாக இருக்கிறது. கட்டாய கண்காணிப்பு, சான்றிதழ் மற்றும் ...
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் இன்று நிகழ்ந்த பேருந்து விபத்தில் பல பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர் என அறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன். ஒரே தருணத்தில் பல குடும்பங்களை சிதைக்கும் இந்த கொடுரமான துயரச் சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது. தங்களது அன்றாட வேலைகளுக்கு சென்று கொண்டிருந்த பொதுமக்கள் இவ்வாறு எதிர்பாராத முறையில் உயிரிழக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பது மிகுந்த வருத்தத்திற்குரியது.
24/11/2025 அறிக்கை தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் இன்று நிகழ்ந்த பேருந்து விபத்தில் பல பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர் என அறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன். ஒரே தருணத்தில் பல குடும்பங்களை சிதைக்கும் இந்த கொடுரமான துயரச் சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது. தங்களது அன்றாட வேலைகளுக்கு சென்று கொண்டிருந்த பொதுமக்கள் இவ்வாறு எதிர்பாராத முறையில் உயிரிழக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பது மிகுந்த வருத்தத்திற்குரியது. உயிரிழந்த ஒவ்வொருவருக்கும் தனித்தனி கனவுகளும் ஆசைகளும் இருக்கும். அதனை நொறுக்கும் ...