National Herald Case

நேஷனல் ஹெரால்ட் வழக்கு பற்றிய முக்கிய கேள்வி பதில்கள்

 

1. கேள்வி: ‘யங் இந்தியா’ அமைப்பிலிருந்து திருமதி சோனியா காந்தியோ அல்லது ராகுல்காந்தியோ ஏதாவது ஆதாயம் பெற்று வந்தனரா?

பதில்: இல்லவே இல்லை! லாபநோக்கில்லாத, 25வது பிரிவின்படி துவக்கப்பட்ட யங் இந்தியா நிறுவனத்தின் இயக்குனர்களோ, பங்குதாரர்களோ, எந்த விதமான நிதி ஆதாயங்களையும் பெற்றிடக்கூடாது என்று சட்டப்படி தடை இருக்கிறது. எனவே சோனியா காந்தியும், ராகுல்காந்தியும் இதனால் எந்த விதமான நிதி ஆதாயங்களை பெற்றிடும் வாய்ப்புகளே இல்லை.

 

2. கேள்வி: ஏதாவது சொத்துக்கள், ‘அசோசியேடட் ஜர்னல் லிமிடெட்’ (அசோசியேடட் ஜர்னல் லிமிடெட்) டிலிருந்து, ‘யங் இந்தியா’விற்கு மாற்றப்பட்டுள்ளனவா?

பதில்: இல்லை, இல்லவே இல்லை! அசோசியேடட் ஜர்னல் லிமிடெட்டின் சொத்துக்கள் அனைத்தும், அதனிடமே உள்ளன. ‘யங் இந்தியா’ நிறுவனத்திற்கோ, அல்லது அதன் இயக்குனர்களுக்கோ, அல்லது அதன் பங்குதாரர்களுக்கோ ஒரு பைசா கூட சென்றடையவில்லை.

 

3. கேள்வி: ‘அசோசியேடட் ஜர்னல் லிமிடெட்’ சொத்துக்களை ‘யங் இந்தியா’ (யங் இந்தியா) தனது பேரில் எடுத்துக்கொண்டிருக்கிறதா?

பதில்: இல்லை. அசோசியேடட் ஜர்னல் லிமிடெட்டும் யங் இந்தியாவும், தனித்தனியான அமைப்புகளே அசோசியேடட் ஜர்னல் லிமிடெட்டின் அனைத்துச் சொத்துக்களும், உடமைகளும், இன்றும் அசோசியேடட் ஜர்னல் லிமிடெட்டிடமேதான் இருக்கின்றன. இந்தக் குற்றச்சாட்டு, ‘இந்தியன் ஹோட்;டல்ஸ் லிமிடெட்’இன் பங்குதாரர் ஒருவர், ‘தாஜ் குரூப்’ ஹோட்டல்களின் சொத்துக்களின் மீது சொந்தங் கொண்டாடலாம் என்று கூறுவது போல் இருக்கிறது.

 

4. கேள்வி: ‘அசோசியேடட் ஜர்னல் லிமிடெட்டின் சொத்துக்களை அபகரிப்பதற்காகவே யங் இந்தியா என்ற நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது என்ற குற்றசாட்டு இருக்கிறதே?

பதில்: இது போல் வடிகட்டின பொய் எதுவுமிருக்க முடியாது. இதற்கு நேர்மாறாக, அசோசியேடட் ஜர்னல் லிமிடெட்டின், பெரும் பங்குதாரராக இருந்திடும், லாப நோக்கமில்லாத, 25வது பிரிவின் படி உருவாக்கப்பட்ட யங் இந்தியா நிறுவனமானது, அசோசியேடட் ஜர்னல் லிமிடெட்டின் சொத்துக்களை பாதுக்காத்திட வலுச் சேர்த்துள்ளது.

 

5. கேள்வி: காங்கிரஸ் கட்சி, அசோசியேடட் ஜர்னல் லிமிடெட்க்கு ஏன் ரூபாய் 90 கோடி கடனாகக் கொடுத்தது?

பதில்: அசோசியேடட் ஜர்னல் லிமிடெட் நிறுவனத்திற்கு நிதி நெருக்கடி ஏற்படும் பொழுதெல்லாம் அந்நிறுவனத்திற்கு, காங்கிரஸ் கட்சி, பல ஆண்டுகளாக நிதி உதவி செய்துவந்தது. ‘சுதந்திரப் போராட்டத்தின்’ குரலாக அமைத்த அசோசியேடட் ஜர்னல் லிமிடெட்டை ஆதரிப்பது கட்சியின் தலையாய கடமை என்பதைதான் இது உணர்த்துகிறது. 1937ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட, அசோசியேடட் ஜர்னல் லிமிடெட்;டின், நிறுவனப்பத்திரம் (நிறுவனத்தின் ஆநஅழசயனெரஅ ழக யுளளழஉயைவழைn), தனது முதல் குறிக்கோளாக கூறுவது யாதெனில் இந்நிறுவனத்திலிருந்து வெளியிடப்படும், தினப்பத்திரிக்கையோ, இடைவெளிவிட்டு வெளியிடப்படும் பத்திரிக்கையோ, இதழ்களோ, அல்லது மலர்களோ, தங்களது கொள்கைகளையும், கோட்பாடுகளையும், இந்திய தேசிய காங்கிரசின் கடவின் கொள்கைகளையும், கோட்பாடுகளையும் ஒத்ததாகவே இருக்கவேண்டும்’ என்பதுதான். அசோசியேடட் ஜர்னல் லிமிடெட்டிற்கும் ஆரம்பகாலத்திலிருந்து, காங்கிரஸ் கட்சிக்கும், உள்ள பிரிக்கமுடியாத தொடர்பினைத்தான் இது எடுத்துக்காட்டுகிறது. காங்கிரஸ் கட்சி, தனது குறிக்கோள்களை அசோசியேடட் ஜர்னல் லிமிடெட் மூலம்தான் நிறைவேற்றிக் கொள்கிறது.

 

6. கேள்வி: யங் இந்தியா என்பது ‘வீடுகள் கட்டுமான நிறுவனம்’ என்கிறாரே அருண் ஜெட்லி, அது உண்மையா?

பதில்: அப்பட்டமான பொய். யங் இந்தியாவிற்க்கு என்று வீட்டுமனைச் சொத்துக்களோ அல்லது அசையா சொத்துக்கள் என்றோ எதுவும் கிடையாது. அசோசியேடட் ஜர்னல் லிமிடெட் – ன் அனைத்து சொத்துக்களும், அசோசியேட் ஜர்னல் வசமே உள்ளது. ஜெட்லியின் இந்தக் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது.

 

7. கேள்வி: 2010 ஆம் ஆண்டு ரூபாய் 90 கோடி கடன்களை திருப்பிக் கொடுப்பதற்காக, அசோசியேடட் ஜர்னல் லிமிடெட் நிறுவனம் ஏன் வங்கிகளை அணுகிடவில்லை?

பதில்: அசோசியேடட் ஜர்னல் லிமிடெட் ன் நிறுவனத்திற்கு (நிதிநிலைகளில்) எதிர்மறையான மதீப்பிடுகள்தான் தான் இருப்பதாலும், அதற்கு மிகவும் குறைந்த வருமானமே இருப்பதாலும் அதனுடைய வரவு-செலவு கணக்குகள் சரிவர பராமரிக்கப்பட்டு வராமல் இருந்ததாலும், எந்த ஒரு வணிக வங்கியும்,அதற்கு ஒரு ரூபாய் கடன் கூட கொடுக்க முன்வரவில்லை.

 

8. கேள்வி: அரசியல் கட்சிகள் கடன்கள் கொடுத்திடலாமா?

பதில்: அரசியல் கட்சிகள் கடன் கொடுத்திடக் கூடாது என்று கட்டுப்பாடு விதித்திடும் சட்டம் எதுவுமில்லை. உண்மையைச் சொல்லப் போனால், 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், இது தொடர்பாக, இந்திய தேர்தல் ஆணையம் ஒரு தெளிவான ஆணையைப் பிறப்பித்திருக்கிறது. ‘காங்கிரஸ் கட்சி’ கடன் கொடுத்துவரும் பழக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. எனவே, அதன் அங்கீகாரத்தை ரத்து செய்திட வேண்டும் என்று, தேர்தல் கமிஷனிடம் காங்கிரஸ் கட்சி மீது சுப்பிரமணியம் சாமி, ஒரு குற்றச்சாட்டை வைத்தார். தேர்தல் கமிஷனின் முழு பெஞ்சின் ஆணை, அவரது குற்றச்சாட்டு மனுவை நிராகரித்துவிட்டது.

 

9. கேள்வி: அசோசியேடட் ஜர்னல் லிமிடெட்டின் நிதி நிலைமை எந்த அளவிற்கு மோசமாக இருந்தது?

பதில்: அசோசியேடட் ஜர்னல் லிமிடெட் ன் லாப-நஷ்டக் கணக்கு (லட்சங்களில்) கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 2011 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அசோசியேடட் ஜர்னல் லிமிடெட் ன கடனெல்லாம் அடைக்கப்பட்டுள்ளது. 2011-12 ல் அசோசியேடட் ஜர்னல் லிமிடெட் பல ஆண்டுகளுக்குப் பின் முதன்முதலாக லாபம் ஈட்டியுள்ளது என்று அறிவிக்க முடிகிறது. கடன் நிலையிலிருந்து லாப நிலையை ஈட்டியுள்ளது. காங்கிரஸ் கட்சி, அசோசியேடட் ஜர்னல் லிமிடெட் க்கு கூறிய, ‘நிதிநிலையை மீட்டிடும்’ ஆலோசனையின் விளைவுதான் இந்த மீட்பு.

 

10. கேள்வி: காங்கிரஸ் கட்சி கொடுத்த நிதிஉதவியை அசோசியேடட் ஜர்னல் லிமிடெட் எவ்வாறு பயன்படுத்தியது?

பதில்: ஊழியர்களின் சம்பள பாக்கி, விருப்ப ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கான பாக்கிகள், அரசு, வரிகள், உள்ளாட்சி நிறுவனங்களுக்குரிய கட்டணங்கள், பாக்கிகள், ஆகியவற்றிற்காக இந்நிதியுதவி பயன்படுத்தப் பட்டுள்ளது.

 

11. கேள்வி: அசோசியேடட் ஜர்னல் லிமிடெட்டின் சொத்துக்களை விற்று ஏன் கடன்கள் தீர்க்கப்படவில்லை?

பதில்: அசோசியேடட் ஜர்னல் லிமிடெட்டின் பெரும்பாலான சொத்துக்கள், அரசுக்கு குத்தகைக்கு விடப்பட்டிருக்கின்றன. இதனால் அவற்றினை விற்றிட தடை இருந்தது.

 

12. கேள்வி: சிலர் குற்றறம் சாட்டுவது போல், அசோசியேடட் ஜர்னல் லிமிடெட்டின் பங்குதாரர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனரா?

பதில்: 2011 ஆம் ஆண்டு இந்நிறுவனத்தின், தனிச்சிறப்பு பொதுக்குழு கூட்டம் கூட்டப்பட்டு, அசோசியேடட் ஜர்னல் லிமிடெட்டின் கடன்களை தீர்ப்பதற்காக, ‘யங் இந்தியா’ நிறுவனத்திற்கு புதிய பங்குகளை அளித்திடலாம் என்ற தீர்மானத்தை கூட்டத்தில் பங்கேற்ற பங்குதாரர்கள் அனைவரும் ஏகமனதாக வாக்களித்து நிறைவேற்றியுள்ளனர்.

 

13. கேள்வி: ‘நேஷனல் ஹெரால்டு’ பத்திரிக்கை மீண்டும் புத்துயிர் பெறுமா?

பதில்: நேஷனல் ஹெலால்டை மீண்டும் உயிர்ப்பித்திட வேண்டும் என்பதே அசோசியேடட் ஜர்னல் லிமிடெட்டின் நோக்கமாகும். பண்டித ஜவஹர்லால் நேருவால் நிறுவப்பட்ட அப்பத்திரிக்கையின் குரல் மீண்டும் ஒலித்திட வேண்டும் என்று அசோசியேடட் ஜர்னல் லிமிடெட் மிகவும் முனைப்புடன் செயல்பட்டுவருகிறது.

 

14. கேள்வி: ஒரு அரசியல் கட்சிக்கென்று என தனியாக ஒரு பத்திரிக்கை ஏன் வேண்டும்?

பதில்: மக்களிடையே, தங்களது கொள்கைகளையும், கோட்பாடுகளையும் மிகச்சிறந்த முறையில் பரப்பிடுவது என்பது ஒவ்வொரு அரசிய கட்சியின் முக்கியத் தேவையாகும். இந்த நிறைவேற்றிட, பத்திரிக்கை ஒரு சாதனமாக அமைகிறது.

 

#NationalHerald #YoungIndia #AssociateJournal #SoniaGandhi #RahulGandhi #Congress