7 முறை தான் பேசியிருக்கிறார்கள். கூட்டு நடவடிக்கைக்குழு மூலமாக தீர்வு காண ஒன்றிய அரசு தயாராக இல்லை என்பதையே இது காட்டுகிறது.
12/11/2025 அறிக்கை இலங்கை கடற்பகுதியில் சர்வதேச கடல் எல்லையை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதும், படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் நீதிமன்றங்கள் சிறையில் அடைப்பதும், அபராதம் விதிப்பதும் பா.ஜ.க. ஆட்சியில் தொடர் கதையாக நடந்து வருகிறது. இதை தடுத்து நிறுத்த வேண்டுமென்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு பலமுறை கடிதம் எழுதியிருக்கிறார். எந்த கடிதத்திற்கும் உரிய தீர்வை ஒன்றிய அரசு எடுக்கவில்லை. இலங்கை அரசோடு ...
இந்திய தேர்தல் ஆணையர்கள் நியமனம் என்றைக்கு பா.ஜ.க.வின் விருப்பப்படி நடக்க ஆரம்பித்ததோ அது முதற்கொண்டு அதன் தனித்தன்மையையும், சுதந்திரத்தையும் முற்றிலும் இழந்து விட்டது.
10/11/2025 அறிக்கை இந்திய தேர்தல் ஆணையர்கள் நியமனம் என்றைக்கு பா.ஜ.க.வின் விருப்பப்படி நடக்க ஆரம்பித்ததோ அது முதற்கொண்டு அதன் தனித்தன்மையையும், சுதந்திரத்தையும் முற்றிலும் இழந்து விட்டது. கடந்த காலங்களில் கர்நாடகா, மகாராஷ்டிரா, ஹரியானா சட்டமன்றத் தேர்தல்களில் தேர்தல் ஆணையத்தின் துணை கொண்டு வாக்காளர் பட்டியலில் மோசடி செய்து பா.ஜ.க. வெற்றி பெற்றதை ஆதாரத்துடன் தலைவர் ராகுல்காந்தி பலமுறை ஊடக சந்திப்புகள் மூலம் அம்பலப்படுத்தியிருக்கிறார். பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே 16 ...
வங்கிகளை தேசியமயமாக்கியது எதிர்பார்த்த பலன்களை கொடுக்கவில்லை, வங்கிகளின் தனியார் மயம் தேச நலனை பாதிக்காது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியிருப்பது மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் தருகிறது.
06/11/2025 அறிக்கை வங்கிகளை தேசியமயமாக்கியது எதிர்பார்த்த பலன்களை கொடுக்கவில்லை, வங்கிகளின் தனியார் மயம் தேச நலனை பாதிக்காது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியிருப்பது மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் தருகிறது. அன்னை இந்திரா காந்தி அவர்கள் 14 வங்கிகளை 1969 இல் தேசியமயமாக்குவதற்கு எடுத்த முயற்சிகளை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். அன்று மன்னர் மானிய ஒழிப்பு, வங்கிகள் தேசியமய நடவடிக்கையை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. அதை நிறைவேற்றுவதற்காக நாடாளுமன்றத்தில் ...
தமிழ்நாட்டு மீனவர்கள் 35 பேரை இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி கைது செய்ததோடு, மூன்று விசைப்படகுகள் மற்றும் 1 நாட்டுப் படகை பறிமுதல் செய்திருக்கிறது.
03/11/2025 அறிக்கை தமிழ்நாட்டு மீனவர்கள் 35 பேரை இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி கைது செய்ததோடு, மூன்று விசைப்படகுகள் மற்றும் 1 நாட்டுப் படகை பறிமுதல் செய்திருக்கிறது. தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது ஆண்டாண்டு காலமாக பா.ஜ.க. ஆட்சியில் தொடர் நிகழ்வாக இருந்து வருகிறது. கடந்த மூன்றாண்டுகளில் 975 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 136 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவர்களது குடும்பங்களின் வாழ்வாதாரம் மிகுந்த ...
பீகார் மாநில தேர்தல் பரப்புரையின் போது அரசியல் ஆதாயம் தேடுகிற நோக்கில் தமிழர்கள் மீது வன்மத்தை வெளிப்படுத்துகிற வகையில் பேசியதற்கு தமிழ்நாட்டில் இருந்து கடுமையான எதிர்ப்பு வெளிப்படுத்தியதை மடைமாற்றம் செய்ய பிரதமர் மோடி வரலாற்று திரிபு வாதங்களை செய்திருக்கிறார்
01/11/2025 அறிக்கை பீகார் மாநில தேர்தல் பரப்புரையின் போது அரசியல் ஆதாயம் தேடுகிற நோக்கில் தமிழர்கள் மீது வன்மத்தை வெளிப்படுத்துகிற வகையில் பேசியதற்கு தமிழ்நாட்டில் இருந்து கடுமையான எதிர்ப்பு வெளிப்படுத்தியதை மடைமாற்றம் செய்ய பிரதமர் மோடி வரலாற்று திரிபு வாதங்களை செய்திருக்கிறார். பீகாரில் பேசியதற்கு மாறாக, அகமதாபாத்தில் வல்லபாய் படேல் அவர்களின் 150-வது பிறந்தநாள் விழாவில் பேசும் போது உலகின் பழமையான மொழிகளில் ஒன்றான தமிழ் மொழி இந்தியாவில் இருப்பதில் ...