செய்தி வெளியீடுகள்

நாளை காலை 7 மணி முதல் தொடங்குகிற வாக்குப் பதிவில் எவ்வளவு விரைவாக சென்று வாக்களிக்க முடியுமோ அவ்வளவு விரைவாக சென்று தவறாமல் உங்களது ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டுமென வாக்காள பெருமக்களை அன்போடு வேண்டுகிறேன். நீங்கள் அளிக்கிற ஒவ்வொரு வாக்கும் 140 கோடி இந்தியர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் என்கிற கடமை உணர்வோடு உங்கள் வாக்குகளை மிகுந்த பொறுப்புணர்வோடு அளிக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். – தலைவர் திரு.கு.செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ.

18-April-2024 அறிக்கை நாட்டில் இதுவரை நடைபெற்ற மக்களவை தேர்தல்களிலேயே மிகமிக முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக வருகிற மக்களவைத் தேர்தல் அமைந்திருக்கிறது. இது இந்தியாவின் எதிர்காலத்தையும், நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தையும் நிர்ணயிக்கப் போகிற தேர்தலாகும். இந்தியாவில் ஜனநாயகம் நீடிக்கப் போகிறதா ? சர்வாதிகாரம் நீடிக்கப் போகிறதா ? என்பது குறித்து வாக்காளப் பெருமக்கள் முடிவு செய்ய வேண்டிய தேர்தல். சுதந்திர இந்தியா காணாத வகையில் இந்திய அரசமைப்புச் சட்டம் கடுமையான தாக்குதலுக்கு ...

இந்திய தேசிய காங்கிரஸ் தலைமையில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்தியா கூட்டணியால் அமைய இருக்கும் ஆட்சியில் அனைத்து கிறிஸ்துவ திருச்சபைகளுக்கும் அரசு அங்கீகாரம் அளித்து வழிபாட்டு சுதந்திரம் மற்றும் பாதுகாப்பு அளிக்கும் கோரிக்கையை முழுமனதோடு காங்கிரஸ் கட்சி ஏற்றுக் கொள்கிறது. இந்த பின்னணியில் இந்திய கிறிஸ்துவ சங்கத்தின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட காங்கிரஸ் கட்சிக்கு வருகிற மக்களவை தேர்தலில் தங்களது அமைப்புகளோடு இணைந்து இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.- தலைவர் திரு.கு.செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ.

16-April-2024 அறிக்கை இந்தியா முழுவதிலும் உள்ள பெந்தெகொஸ்தே மற்றும் சுயாதீன திருச்சபைகளின் ஆராதனை வழிபாட்டு உரிமைகள் பாதுகாக்கப்படவும், இந்திய கிறஸ்துவர்களின் அனைத்து விதமான உரிமைகள் மற்றும் திருச்சபைகளின் நலன்காக்க யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லாமல் சேவை செய்ய இந்திய கிறிஸ்துவ சங்கம் உருவாக்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது. ஆனால், பா.ஜ.க. ஆட்சி அமைந்தது முதற்கொண்டு இந்த அமைப்புகள் சுதந்திரமாக தனித்தன்மையுடன் செயல்பட இயலாத வகையில் வகுப்புவாத சக்திகளும், வன்முறை கும்பல்களும் அச்சுறுத்தி ...

பத்து ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவு கட்ட மீண்டும் பாசிச, சர்வாதிகார ஆட்சி அமையாமல் தடுத்திட நாற்பதும் நமதே என்ற குறிக்கோளை அடைய இந்தியா கூட்டணிக்கு தமிழக மக்கள் அமோக ஆதரவு அளிக்க வேண்டுமென அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.- தலைவர் திரு.கு.செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ.

16-April-2024 அறிக்கை வடமாநிலங்களில் பா.ஜ.க.வுக்கு எதிர்ப்பு அலை வீசத் தொடங்கிய நிலையில் தமிழகத்தை புகலிடமாக கருதி பிரதமர் மோடி பரப்புரை மேற்கொள்ள ஒன்பதாவது முறையாக வருகை புரிந்திருக்கிறார். ஆனால், 100 முறை தமிழகத்திற்கு வந்தாலும் தலைவர் ராகுல்காந்தி, தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் கோவை பொதுக்கூட்ட மேடையில் நிலவிய உணர்ச்சிபூர்வமான பரஸ்பர நட்பு, தமிழக மக்களிடம் காட்டிய உண்மையான அன்பிற்கு இணையாக நரேந்திர மோடியின் பகல் வேஷம் எடுபடாது ...

மக்களின் நம்பகத்தன்மையை இழந்த பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை என்பது வெறும் கண்துடைப்பு நாடகமாகவே இருக்கிறது. இதில் இந்தியாவின் வளர்ச்சி குறித்து ஆக்கப்பூர்வமான கருத்துகள் எதையும் பா.ஜ.க. கூறவில்லை. இந்த தேர்தல் அறிக்கையை நாட்டு மக்கள் நிச்சயம் புறக்கணிப்பார்கள். – – தலைவர் திரு.கு.செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ.

14-April-2024 அறிக்கை 2014, 2019 ஆகிய தேர்தல்களில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத பா.ஜ.க. 2024 தேர்தலுக்கு முதல்கட்ட தேர்தல் தொடங்கி அனைத்து கட்சிகளும் தேர்தல் அறிக்கை வெளியிட்ட பிறகு அவற்றை பார்த்து இன்று தேர்தல் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை சமூகநீதி, மதநல்லிணக்கம், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகியவற்றுக்கு எதிராக பல்வேறு அம்சங்கள் உள்ளன. பல்வேறு மதம், மொழி, ஜாதி, இனங்களை கொண்ட பன்முகத்தன்மை கொண்ட நாட்டில் பொது ...

தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் மக்கள் பேராதரவோடு இந்தியா கூட்டணி வெற்றி பெற்று பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுகட்டப்படும். அதற்கு தமிழகம் முன்னோடியாக இருக்கிறது என்கிற வரலாற்றுச் சிறப்பு இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது. பாசிச பா.ஜ.க. ஆட்சி வீழ்த்தப்படுவதும், மோடியின் சர்வாதிகார ஆட்சியிலிருந்து இந்தியா மீட்கப்படுவதும் உறுதியாகி இருக்கிறது. – தலைவர் திரு செல்வபெருந்தகை

13-April-2024 அறிக்கை தமிழகத்திற்கு வருகை புரிகிற பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் மக்களை திசைத் திருப்புவதற்காக ஆதாரமற்ற அவதூறான கருத்துகளை பரப்பி வருகின்றனர். தமிழகத்தில் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கவில்லை என்பதற்காக அன்னை சோனியா காந்தி குடும்பத்தின் மீதும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி மீதும் சேற்றை வாரி இறைத்திருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சியை குடும்ப கட்சி என்று சொல்கிறார்கள். கீரல் விழுந்த கிராமபோன் ரிக்கார்டை ...