செய்தி வெளியீடுகள்

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை என்பது நடைமுறை சாத்தியமானது எதுவோ அதை கடந்த கால அனுபவத்தின் அடிப்படையில் நியாய பத்திரமாக நாட்டு மக்களுக்கு வழங்கியிருக்கிறோம். இதை விமர்சனம் செய்வதற்கு மக்கள் விரோத பாசிச ஆட்சி நடத்திய பா.ஜ.க.வுக்கு உரிமையும் இல்லை, தகுதியும் இல்லை.

07-April-2024 அறிக்கை காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வாக்காளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும், நடைமுறை சாத்தியமற்றது என்றும் பா.ஜ.க. விமர்சனம் செய்திருக்கிறது. 2014 மக்களவை தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத பா.ஜ.க., 10 ஆண்டுகாலம் மக்கள் விரோத ஆட்சியை நிறைவு செய்திருக்கிறது. கடந்த 2019 ஆகஸ்ட் 15 சுதந்திர தின விழாவில் தில்லி செங்கோட்டையில் இந்திய பொருளாதாரத்தை 2024 ஆம் ஆண்டிற்குள் 5 டிரில்லியன் கோடி டாலராக - அதாவது ...

மக்களவை தேர்தலில் பிரதமர் மோடியின் ஊழலுக்கு உரிய படிப்பினையை வருகிற மக்களவை தேர்தல் மூலம் மக்கள் புகட்டுவார்கள் என்பது உறுதி. – தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை

06-April-2024 அறிக்கை பா.ஜ.க. ஆட்சியில் ஊழலை அணு அளவும் அனுமதிக்க மாட்டேன் என்று பிரதமர் மோடி பலமுறை கூறிவந்த நிலையில் ரபேல் ஊழல், நெடுஞ்சாலைத்துறை ஊழல், தேர்தல் பத்திர நன்கொடை மெகா ஊழல் என தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் ஊழலின் உச்சத்தை தொடுகிற வகையில் பி.எம். கேர்ஸ் மோசடி ஊழல் பரபரப்பாக அம்பலமாகி உள்ளது. தேர்தல் பத்திர நன்கொடையில் பா.ஜ.க. பெற்றது ரூபாய் 8252 கோடி. ஆனால், பி.எம்.கேர்ஸ் ...

மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அகற்றப்பட்டு இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள அனைத்து வாக்குறுதிகளும் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. – தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை

04-April-2024 அறிக்கை 2024 மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை திரு. மல்லிகார்ஜுன் கார்கே, அன்னை சோனியா காந்தி, திரு. ராகுல்காந்தி ஆகியோர் தலைநகர் தில்லியில் வெளியிட்டுள்ளனர். 10 ஆண்டுகால ஒன்றிய பா.ஜ.க. அரசினால் ஏற்பட்ட பேரழிவுகளுக்கு தீர்வு காண்கிற வகையில் தேர்தல் அறிக்கை அமைந்திருப்பதாக அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தேர்தல் அறிக்கையில் சமூகநீதி, மதச்சார்பின்மை, மாநில உரிமைகள் பாதுகாப்பு, பாலின சமத்துவம், பட்டியலின மக்களுக்கு முக்கியத்துவம் ...

பாசிச, சர்வாதிகார பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுகட்ட இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு தமிழக வாக்காளர்கள் ஆதரவு அளிக்க வேண்டுமென அன்போடு கேட்டுக் கொள்கிறேன். இதன்மூலமே சர்வாதிகாரம் வீழ்த்தப்படும், ஜனநாயகம் காப்பாற்றப்படும். – தலைவர் திரு.கு.செல்வப்பெருந்தகை

04-April-2024 அறிக்கை கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தின விழாவில் தில்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து பிரதமர் மோடி பேசும் போது, ‘இந்திய பொருளாதாரத்தை 2024 ஆம் ஆண்டிற்குள் 5 டிரில்லியன் கோடி டாலராக - அதாவது இந்திய மதிப்பில் 390 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு உயர்த்தி தற்போது உள்ள ஐந்தாவது நிலையில் இருந்து மூன்றாவது நிலைக்கு வளம்மிக்க ...

நமது பரப்புரையின் மூலம் உத்தமர் வேடம் தரிக்கும் மோடியின் முகத்திரை கிழிக்கப்படுகிற வகையில் கண் துஞ்சாது, அயராது செயல்பட வேண்டுமென தமிழகத்திலுள்ள காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சியினரை அன்போடு வேண்டுகிறேன். – தலைவர் திரு செல்வப்பெருந்தகை

04-April-2024 அறிக்கை கடந்த 2014 பொதுத் தேர்தலுக்கு முன்பாக தனியார் தொலைக்காட்சிக்கு நரேந்திர மோடி அளித்த பேட்டியில், ‘பா.ஜ.க. ஆட்சி அமைந்தால் ஊழலை ஒழிப்பதற்கான அனைத்து வழிகளையும் மேற்கொள்வோம். இந்த நடவடிக்கையில் அரசியல் குறுக்கீடுகள் இருந்தால், அதையும் முறியடிப்போம்” என்று கூறி பரப்புரை மேற்கொண்டார். கடந்த 10 ஆண்டு கால பா.ஜ.க. ஆட்சியில் நடைபெற்ற ஊழல்களில் முதலில் வெளி வந்தது ரபேல் விமான கொள்முதல் ஊழல். இதனால் அரசுக்கு ஏற்பட்ட ...