செய்தி வெளியீடுகள்

புதிய நாடாளுமன்ற வளாகத்தில் அத்துமீறி இளைஞர்கள் நுழைந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது…

13-Dec-2023 புதிய நாடாளுமன்ற வளாகத்தில் அத்துமீறி இளைஞர்கள் நுழைந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. மைசூர் பா.ஜ.க. எம்.பி., பரிந்துரையின் பேரில் பார்வையாளர் மாடத்திற்கு வந்த அந்த இளைஞர் திடீரென்று இருக்கைகள் மீது எகிறி குதித்து மக்களவைக்குள் நுழைந்தது பாதுகாப்பையே கேள்விக்குறியாக்கியுள்ளது. 2001 இல் நடந்த பாராளுமன்றத் தாக்குதலில் 7 பேர் உயிரிழந்த அந்த சம்பவத்தின் நினைவு நாளான இன்று இத்தகைய சம்பவம் நடந்திருப்பது மிகுந்த வேதனையைத் தருகிறது. புதிய நாடாளுமன்றத்தில் ...

கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வரலாறு காணாத கனமழை கொட்டித் தீர்த்ததால் சென்னை மாநகரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்டங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. – தலைவர் திரு கே எஸ் அழகிரி

06-Dec-2023 அறிக்கை கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வரலாறு காணாத கனமழை கொட்டித் தீர்த்ததால் சென்னை மாநகரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்டங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மழைநீர் பெருக்கெடுத்து சாலைகளில் தேங்கிய காரணத்தால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலையில் கடும் சிரமத்தை மேற்கொள்ள வேண்டியுள்ளது. ஆனால், சென்னையை பொறுத்தவரை 14 அமைச்சர்கள் களத்தில் நின்று பணியாற்றியதோடு, மாநகராட்சி அதிகாரிகளின் துணை கொண்டு உடனடியாக ...

ஊழலை ஒழிக்க வந்த புனிதர்கள் போல் வேடம் தரித்து வந்த நிலையில், அமலாக்கத்துறை அதிகாரி அன்கிட் திவாரி லஞ்சம் பெற்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். அமலாக்கத்துறை தமிழகத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை.

02-Dec-2023 அறிக்கை தமிழக அரசின் டாக்டர் ஒருவரை வழக்கிலிருந்து விடுவிக்க ரூபாய் 3 கோடி பேரம் பேசி ரூபாய் 20 லட்சம் லஞ்சப் பணம் பெற்று காரில் தப்ப முயன்றிருக்கிறார் மத்திய அரசின் அமலாக்கத்துறை அதிகாரி. தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை 25 கி.மீ. தூரம் விரட்டி சென்று, திரைப்படங்களில் வருவது போல் மடக்கி கைது செய்த செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. பொதுவாக மத்திய அரசின் அமலாக்கத்துறை ...

வளர்ச்சி அம்பானி, அதானி உள்ளிட்ட சில தொழிலதிபர்களுக்கு தானே தவிர, 140 கோடி இந்தியர்களுக்கு அல்ல. – தலைவர் திரு கே எஸ் அழகிரி

30-Nov-2023 அறிக்கை தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மேற்கொண்டு வருகிற செயற்கையான நடைபயணத்தில் அடிப்படை ஆதாரமில்லாமல் கூறுகிற கருத்துகளை தெளிவுபடுத்து வேண்டியது அவசியமாகிறது. நேற்றைய கூட்டத்தில் பேசும் போது, 2011 இல் 35-வது இடத்தில் வளர்ச்சிப் பாதையில் இருந்த இந்தியா, இன்று 11-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது என்று கூறியிருக்கிறார். கடந்த 2004 ஆம் ஆண்டு டாக்டர் மன்மோகன்சிங் தலைமையில் ஆட்சி அமைந்த போது 15 நாட்களுக்கு கூட அந்நிய செலாவணி ...

5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தால் ஏழைகள், பணக்காரர்கள் என்று இந்தியா இரண்டாகப் பிளவுபடுமா? பெரும்பாலான மக்கள் இன்னும் வளர்ச்சிப் பாதையில் இணைக்கப்படாமலேயே மோடி ஆட்சி நடைபெற்று வருகிறது. வளர்ச்சியில் சமநிலைத்தன்மை இல்லை. – தலைவர் திரு கே எஸ் அழகிரி

24-Nov-2023 அறிக்கை 4கடந்த வாரம் சத்தீஸ்கரில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் மோடி, தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் ஏழைகளுக்கு வழங்கப்படும் பிரதமரின் இலவச உணவு தானிய திட்டம் நீட்டிக்கப்படும் என்று அறிவித்துள்ளார். எந்த குடிமகனும் பட்டினியோடு உறங்கச் செல்லக்கூடாது என்பதற்காக அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டித்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 2028 ஆம் ஆண்டு வரை 80 கோடி இந்தியர்கள் பசியிலிருந்து தங்களைத் தற்காத்துக் ...