செய்தி வெளியீடுகள்

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறாததை எல்லாம் இட்டுக்கட்டி கூறி திரிபு வாதங்களை முன்வைத்து பரப்புரை மேற்கொண்ட நரேந்திர மோடி, தற்போது புதியதொரு நச்சு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். – தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ

09-May-2024 அறிக்கை காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறாததை எல்லாம் இட்டுக்கட்டி கூறி திரிபு வாதங்களை முன்வைத்து பரப்புரை மேற்கொண்ட நரேந்திர மோடி, தற்போது புதியதொரு நச்சு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். அதன்படி காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் தென்னிந்தியர்கள் ஆப்பிரிக்கர்கள் போல் இருக்கிறார்கள் என்று கூறியதாக ஒரு கருத்தை வைத்துக் கொண்டு காங்கிரஸ் கட்சியுடன் உள்ள உறவை முறிக்க தி.மு.க. தயாரா என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி ...

பல்வேறு நிதி இடர்பாடுகளுக்கிடையிலும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் பாரபட்சமான அணுகுமுறைகளுக்கிடையேயும் மகத்தான சாதனைகளை புரிந்து மூன்றாம் ஆண்டிலிருந்து நான்காம் ஆண்டில் காலடி பதிக்கிற தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.  – தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ

08-May-2024 அறிக்கை திராவிட முன்னேற்ற கழக ஆட்சி திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் அமைந்து நேற்றுடன் 3 ஆண்டு நிறைவு பெற்றிருக்கிறது. அனைத்து துறைகளிலும் மகத்தான சாதனைகள் புரிந்து தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் சென்று இந்தியாவின் முன்னோடி மாநிலங்களில் ஒன்றாக திகழச் செய்த தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக மனதார பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன். கடந்த 2021 ஆம் ஆண்டு மே 7 ...

எப்படியாவது, எதையாவது பேசி சாம, பேத, தான, தண்டங்களை பயன்படுத்தி நாட்டு மக்களிடையே பிளவை உருவாக்கி அதன்மூலம் அரசியல் ஆதாயம் தேடி குளிர்காய நினைக்கிற கீழ்த்தரமான அரசியல் பரப்புரையின் மூலம் 2024 மக்களவை தேர்தலில் பிரதமர் மோடி வெல்ல முடியாது. பா.ஜ.க.வுக்கு தோல்வி காத்திருக்கிறது. – தலைவர் திரு செல்வப்பெருத்தகை

06-May-2024 அறிக்கை உலகத்தின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் வரலாற்றுச் சிறப்புகளை இழிவுபடுத்துகின்ற வகையில் பிரதமர் நரேந்திர மோடி தமது தேர்தல் பரப்புரையின் மூலம் தொடர்ந்து பேசி வருகிறார். காங்கிரஸ் கட்சி எழுப்புகிற கேள்விகளுக்கு அவர் பதில் சொல்வதில்லை. அதற்கு மாறாக, காழ்ப்புணர்ச்சியுடன் காங்கிரஸ் தலைவர்களை கொச்சைப்படுத்தி பேசி வருகிறார். நேற்று உத்தரபிரதேசத்தில் பங்கேற்ற தேர்தல் பரப்புரையில், ‘அரச குடும்பத்தின் வாரிசுகளே பிரதமராகும் தீய பழக்கத்தை டீ வியாபாரி ஒழித்து ...

நரேந்திர மோடி காங்கிரசுக்கு சவால் விடவில்லை ! இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு சவால் விடுகிறார் தலைவர் திரு. கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ., அறிக்கை

03-May-2024 அறிக்கை கடந்த 2014, 2019 மக்களவை தேர்தல்களில் வாக்குறுதிகளை கொடுத்தும், புல்வாமா, பாலகோட் தாக்குதலை திசை திருப்பி அரசியல் ஆதாயம் தேடியதைப் போல, 2024 மக்களவை தேர்தலில் பெற முடியாது என்கிற நிலையில் ஆதாரமற்ற அவதூறு குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் கட்சி மீது பிரதமர் மோடி கூறி வருகிறார். தாம் விடுத்த சவால்களுக்கு 9 நாட்களாகியும் காங்கிரஸ் கட்சி பதிலளிக்கவில்லை என்று கூறியிருக்கிறார். அரசமைப்புச் சட்டத்தைப் பற்றி அடிப்படை புரிதல் ...

10 ஆண்டுகாலம் பிரதமராக இருந்த ஒருவருக்கு அரசியலமைப்பு சட்டத்தின்படி இடஒதுக்கீடுகள் மதத்தின் அடிப்படையில் வழங்கப்படுவது அல்ல என்பது புரியாமலேயே ஆட்சி நடத்தியிருக்கிறார். – தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ

30-April-2024 அறிக்கை மக்களவைத் தேர்தலின் முதல் மற்றும் இரண்டாம் கட்டம் முடிந்த நிலையில் மிகுந்த பதற்றத்துடனும், தோல்வி பயத்தினாலும் பிரதமர் மோடி அடிப்படை உண்மைகளுக்கு புறம்பாக ஆதாரமற்ற அவதூறான கருத்துக்களை தேர்தல் பரப்புரையின் போது பேசி வருகிறார். நேற்று மும்பையில் உரையாற்றும் போது, நான் உயிருடன் இருக்கும் வரை மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை அனுமதிக்க மாட்டேன் என்று பேசியிருக்கிறார். 10 ஆண்டுகாலம் பிரதமராக இருந்த ஒருவருக்கு அரசியலமைப்பு சட்டத்தின்படி இடஒதுக்கீடுகள் ...