பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வரலாற்றை திரித்து தவறான கருத்தை பேசுவதை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.
31/10/2025 அறிக்கை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வரலாற்றை திரித்து தவறான கருத்தை பேசுவதை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கின்றேன். இன்று ராஷ்ட்ரிய ஏக்தா திவாஸ் (Rashtriya Ekta Diwas) நிகழ்வில் குஜராத் மாநிலம் ஏக்தா நகரில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் உரையாற்றியபோது, 'சர்தார் வல்லபாய் பட்டேல் முழு ஜம்மு & காஷ்மீரையும் இந்தியாவுடன் இணைக்க விரும்பினார், ஆனால் ஜவஹர்லால் நேரு அதை அனுமதிக்கவில்லை' என்ற ...
சமீபகாலமாக தினமும் பல்வேறு இடங்களில் போலி வெடிகுண்டு மிரட்டல் செய்திகள் பரவிவருவது சமூகத்தில் அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி வருகிறது.
29/10/2025 அறிக்கை சமீபகாலமாக தினமும் பல்வேறு இடங்களில் போலி வெடிகுண்டு மிரட்டல் செய்திகள் பரவிவருவது சமூகத்தில் அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி வருகிறது. பொது இடங்கள், பள்ளிகள், விமான நிலையங்கள், அரசு அலுவலகங்கள், அரசியல் கட்சி அலுவலகங்கள், அணுமின் நிலையங்கள் போன்ற இடங்களிலும் தனிப்பட்ட முறையில் நடிகர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் போன்றவர்களுக்கும் இமெயில் மூலமாக போலி மிரட்டல்கள் விடுவது, பொதுமக்கள் பாதுகாப்பையும் சட்ட ஒழுங்கையும் பாதிக்கும் ஆபத்தான செயல் ஆகும் ...
தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அடுத்த சில நாட்களிலும் மழை தீவிரமாக இருக்கும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை முன்னிட்டு பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்குமாறு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
23/10/2025 அறிக்கை தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அடுத்த சில நாட்களிலும் மழை தீவிரமாக இருக்கும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை முன்னிட்டு பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்குமாறு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் கேட்டுக் கொள்கிறேன். மக்கள் பாதுகாப்பாக இருப்பதற்கு கனமழை, வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஆற்றங்கரைகள், ஏரிக்கரைகள் மற்றும் தாழ்வான இடங்களில் ...
ஹரியானா மாநில காவல்துறை அதிகாரி ஒய். புரன்குமார் பணியின் காரணமாக கொடுக்கப்பட்ட மனஅழுத்தத்தின் விளைவாக தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு மிகுந்த அதிர்ச்சியையும், துயரத்தையும் தருகிறது.
14/10/2025 அறிக்கை ஹரியானா மாநில காவல்துறை அதிகாரி ஒய். புரன்குமார் பணியின் காரணமாக கொடுக்கப்பட்ட மனஅழுத்தத்தின் விளைவாக தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு மிகுந்த அதிர்ச்சியையும், துயரத்தையும் தருகிறது. இந்த செய்தி வெளிவந்தவுடனே மக்களவை எதிர்கட்சித் தலைவர் திரு. ராகுல்காந்தி அவர்கள் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதோடு, 11 பக்க கடிதத்தை எழுதி அதில் பத்திற்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் கொடுத்த அழுத்தம் தான் அவரது இறப்பிற்கு ...
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை பாராட்டிய பிரதமர் நரேந்திர மோடியின் செயலை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.
10/10/2025 அறிக்கை காசா பகுதியில் நடைபெற்று வரும் மனிதாபிமானமற்ற பேரழிவும், பாலஸ்தீன மக்கள் மீது நிகழ்த்தப்படும் இனப்படுகொலையும் உலகம் முழுவதும் கண்டனத்திற்கு உள்ளாகி வரும் நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை தொலைபேசியில் பாராட்டியிருப்பது கடும் அதிர்ச்சியளிக்கிறது. இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான அமைதி ஒப்பந்தத்தை வரவேற்பதாகவும், அது நெதன்யாகுவின் 'சிறந்த தலைமையின் விளைவாகும்” என்றும் மோடி தனது 'எக்ஸ்” தளத்தில் பதிவிட்டுள்ளார். இனப்படுகொலை ...