செய்தி வெளியீடுகள்

பத்து ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவு கட்ட மீண்டும் பாசிச, சர்வாதிகார ஆட்சி அமையாமல் தடுத்திட நாற்பதும் நமதே என்ற குறிக்கோளை அடைய இந்தியா கூட்டணிக்கு தமிழக மக்கள் அமோக ஆதரவு அளிக்க வேண்டுமென அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.- தலைவர் திரு.கு.செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ.

16-April-2024 அறிக்கை வடமாநிலங்களில் பா.ஜ.க.வுக்கு எதிர்ப்பு அலை வீசத் தொடங்கிய நிலையில் தமிழகத்தை புகலிடமாக கருதி பிரதமர் மோடி பரப்புரை மேற்கொள்ள ஒன்பதாவது முறையாக வருகை புரிந்திருக்கிறார். ஆனால், 100 முறை தமிழகத்திற்கு வந்தாலும் தலைவர் ராகுல்காந்தி, தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் கோவை பொதுக்கூட்ட மேடையில் நிலவிய உணர்ச்சிபூர்வமான பரஸ்பர நட்பு, தமிழக மக்களிடம் காட்டிய உண்மையான அன்பிற்கு இணையாக நரேந்திர மோடியின் பகல் வேஷம் எடுபடாது ...

மக்களின் நம்பகத்தன்மையை இழந்த பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை என்பது வெறும் கண்துடைப்பு நாடகமாகவே இருக்கிறது. இதில் இந்தியாவின் வளர்ச்சி குறித்து ஆக்கப்பூர்வமான கருத்துகள் எதையும் பா.ஜ.க. கூறவில்லை. இந்த தேர்தல் அறிக்கையை நாட்டு மக்கள் நிச்சயம் புறக்கணிப்பார்கள். – – தலைவர் திரு.கு.செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ.

14-April-2024 அறிக்கை 2014, 2019 ஆகிய தேர்தல்களில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத பா.ஜ.க. 2024 தேர்தலுக்கு முதல்கட்ட தேர்தல் தொடங்கி அனைத்து கட்சிகளும் தேர்தல் அறிக்கை வெளியிட்ட பிறகு அவற்றை பார்த்து இன்று தேர்தல் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை சமூகநீதி, மதநல்லிணக்கம், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகியவற்றுக்கு எதிராக பல்வேறு அம்சங்கள் உள்ளன. பல்வேறு மதம், மொழி, ஜாதி, இனங்களை கொண்ட பன்முகத்தன்மை கொண்ட நாட்டில் பொது ...

தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் மக்கள் பேராதரவோடு இந்தியா கூட்டணி வெற்றி பெற்று பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுகட்டப்படும். அதற்கு தமிழகம் முன்னோடியாக இருக்கிறது என்கிற வரலாற்றுச் சிறப்பு இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது. பாசிச பா.ஜ.க. ஆட்சி வீழ்த்தப்படுவதும், மோடியின் சர்வாதிகார ஆட்சியிலிருந்து இந்தியா மீட்கப்படுவதும் உறுதியாகி இருக்கிறது. – தலைவர் திரு செல்வபெருந்தகை

13-April-2024 அறிக்கை தமிழகத்திற்கு வருகை புரிகிற பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் மக்களை திசைத் திருப்புவதற்காக ஆதாரமற்ற அவதூறான கருத்துகளை பரப்பி வருகின்றனர். தமிழகத்தில் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கவில்லை என்பதற்காக அன்னை சோனியா காந்தி குடும்பத்தின் மீதும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி மீதும் சேற்றை வாரி இறைத்திருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சியை குடும்ப கட்சி என்று சொல்கிறார்கள். கீரல் விழுந்த கிராமபோன் ரிக்கார்டை ...

தமிழ்நாட்டில் எத்தனை முறை பிரதமர் மோடி வருகை புரிந்தாலும், தமிழகத்தில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாத வகையில் பா.ஜ.க.வுக்கு உரிய பாடத்தை தமிழக வாக்காளர்கள் நிச்சயம் புகட்டுவார்கள். இந்தியா கூட்டணிக்கு ஆதரவு அளிப்பார்கள்.- தலைவர் திரு.கு.செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ.

10-April-2024 அறிக்கை ஒன்றிய பா.ஜ.க. அரசு அமைந்தது முதற்கொண்டு கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் மோடி ஒற்றை ஆட்சியின் மூலம் தமது அலுவலகத்தில் அதிகாரங்களை குவித்துக் கொண்டு ஜனநாயகத்திற்கு விரோதமான செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். மதரீதியாக மக்களை பிளவுபடுத்துகிற நடவடிக்கைகளிலும், எதிர்கட்சிகளை ஒடுக்குவதற்கு வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வுத்துறை ஆகிய அமைப்புகளை தவறான வழிகளில் பயன்படுத்தி வருகிறார். எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது வழக்குகள், விசாரணைகள், சோதனைகள் என ...

நாட்டு மக்களின் வாழ்வாதாரம் சீரழிக்கப்பட்டு, பொருளாதார பாதிப்பின் காரணமாக பா.ஜ.க. ஆட்சி மீது மக்கள் கடும் கோபத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள். இதனடிப்படையில் வருகிற மக்களவை தேர்தலில் பா.ஜ.க. ஆட்சி அகற்றப்பட்டு இந்தியா கூட்டணி ஆட்சி அமைவது உறுதியாகி வருகிறது.  – தலைவர் திரு.கு.செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ.

09-April-2024 அறிக்கை இந்திய தேசிய காங்கிரஸ் வெளியிட்ட நியாய பத்ரா என்ற தேர்தல் அறிக்கை நாட்டிலுள்ள அனைத்து மக்களிடையேயும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருவதை சகித்துக் கொள்ள முடியாத பிரதமர் மோடி, நச்சுத்தனமான கருத்துகளை கூறியிருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை விடுதலை போராட்ட காலத்தில் முஸ்லிம் லீக்கின் தேர்தல் அறிக்கையை போல அமைந்திருப்பதாக கூறியிருக்கிறார். ஆனால், பிரிட்டீஷ் ஆட்சிக் காலத்தில் 1937 ஆம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு 1940 ...