செய்தி வெளியீடுகள்

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிற நெய்வேலி நிலக்கரி நிறுவன பங்குகளை ஒன்றிய பா.ஜ.க. அரசு விற்கக் கூடாது. – தலைவர் திரு செல்வப்பெருந்தகை MLA

08-March-2024 அறிக்கை இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களின் ஆதரவோடு, அன்றைய முதலமைச்சர், பெருந்தலைவர் காமராஜரால் தொடங்கப்பட்ட நெய்வேலி நிலக்கரி நிறுவனம் நிலக்கரி உற்பத்தி, மின்சார உற்பத்தி என தொழில் வளர்ச்சியில் பெரும் பங்கு ஆற்றி வருகிறது. தற்போது 25,000 தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பணியாற்றி வருகிறார்கள். அதில் உற்பத்தியாகிற மின்சாரத்தில் தமிழ்நாட்டிற்கு 70 சதவிகிதம் வழங்கப்படுகிறது. ஒன்றிய பா.ஜ.க. அரசின் லாபம் ஈட்டும் நவரத்னா நிறுவனங்களில் ஒன்றாக ...

இந்த அறப்போராட்டத்தை ஒருதுளியும் மதிக்காமல் புறந்தள்ளி வரும் ஒன்றிய அரசின் இந்த ஜனநாயக விரோத செயலை காங்கிரஸ் கட்சி ஒருபோதும் வேடிக்கை பார்க்காது. – தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ.

06-March-2024 அறிக்கை உயர் நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டி காலவரையற்ற பட்டினிப் போராட்டத்தில் வழக்குரைஞர்கள், தமிழ் ஆர்வலர்கள், சட்டக் கல்லூரி மாணவர்கள் என 24 பேர் 8 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வரும் சூழ்நிலையில், 2006 ஆம் ஆண்டு தமிழ்நாட்டுச் சட்டமன்றப் பேரவை ஒருமனதாக நிறைவேற்றிய தீர்மானத்தை நேரடியாக குடியரசுத் தலைவருக்கு அனுப்பி ஒப்புதலைப் பெறாமல், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பெரும் பிரிவு 348 உட்பிரிவு இரண்டின் படி ...

தேர்தல் ஜனநாயகத்தையே கேலிக்குரியதாக்கி சர்வாதிகார அரசியலை நிலைநாட்ட முயலும் பா.ஜ.க.வுக்கு சாதகமாகச் செயல்படுகிற பாரத ஸ்டேட் வங்கியை கண்டிக்கிற வகையில் சென்னை, நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் உள்;ர் தலைமை அலுவலகத்தின் முன்பு சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் இணைந்து நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் எனது தலைமையிலும், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் டாக்டர் சிரிவெல்ல பிரசாத், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு. எஸ். ராஜேஷ்குமார் ஆகியோர் முன்னிலையிலும் நாளை பிற்பகல் 3.00 மணியளவில் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். – தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ.

06-March-2024 அறிக்கை மக்களவைத் தேர்தல் முடிவடைந்த பின் ஜூன் 30 ஆம் தேதி வரை தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்களை பொதுவெளியில் வெளியிட பாரத ஸ்டேட் வங்கி கால அவகாசம் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது அரசியல் உள்நோக்கம் கொண்ட செயலாகும். தேர்தல் பத்திர நன்கொடை திட்டத்தை அரசமைப்புச் சட்டத்திற்கும், அடிப்படை உரிமைகளுக்கும் எதிரானது என்று கூறி கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை ...

இது மிகப்பெரிய அயோக்கியத்தனமான செயல்… நாட்டிலுள்ள அனைத்து வங்கி சேவைகளும் முழுவதுமாக கணினி மயமாக்கப்பட்டுள்ள விஷயம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. பின்பு எதற்காக பாரத ஸ்டேட் வங்கி உச்சநீதி மன்றம் கேட்ட தரவுகளை கொடுப்பதற்கு 3 மாதம் கால அவகாசம் கூடுதலாக கேட்க வேண்டும்? – தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை MLA

06-March-2024 அறிக்கை கடந்த பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி உச்சநீதிமன்றம் வழங்கிய ஒரு அதிரடி தீர்ப்பில் மத்திய அரசு 2017 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்திய தேர்தல் பத்திரத் திட்டத்தை சட்டத்திற்கு புறம்பான ஒரு திட்டம் என்று அறிவித்தது. அந்த தீர்ப்பின்படி அனைத்து அரசியல் கட்சிகளும் தாங்கள் தேர்தல் பத்திரங்கள் மூலமாக வசூலித்த நன்கொடைகளின் முழு விபரங்களையும் வெளியிட அறிவுறுத்தியது. அதேபோல், தேர்தல் பத்திரங்கள் மூலமாக அரசியல் கட்சிகள் பெற்ற ...

2024 மக்களவை தேர்தலில் மோடி ஆட்சியை அகற்ற தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் இந்தியா கூட்டணி அணி திரண்டு நிற்கிறது. மக்கள் விரோத மோடி ஆட்சியை அகற்ற தலைவர் ராகுல் காந்தி தம்மை வருத்தி நடைப்பயணம் மேற்கொண்டு மக்களோடு மக்களாக அவர்களது துயரங்களைப் பகிர்ந்து கொண்டு மாபெரும் பரப்புரையை மேற்கொண்டு வருகிறார். அவரது உழைப்பிற்குப் பலன் தருகிற வகையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மீண்டும் மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் ஒன்றிய ஆட்சியைக் கைப்பற்றுகிற காலம் வெகு தொலைவில் இல்லை. – தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ.

05-March-2024 அறிக்கை இந்தியாவிலேயே தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி வலிமை பெற்றிருப்பதால் கடந்த தேர்தல்களில் பா.ஜ.க. வெற்றி என்பது கானல் நீராகிவிட்டதை அறிந்த பிரதமர் மோடி அடிக்கடி தமிழக சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். தமிழகத்திற்கு வரும் போதெல்லாம் கோபம் கொப்பளிக்கிறது, பதற்றம் அதிகரிக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அரசுக்கு எதிராக பிரதமர் பதவியில் இருக்கிறோம் என்கிற குறைந்தபட்ச நாகரீகம் கூட இல்லாமல் அவதூறு குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். தேர்தலின் ...