Tag: செல்வப்பெருந்தகை

ஹரியானா சட்டமன்றத் தேர்தலை பொறுத்தவரை, வெளிவந்த முடிவுகளின்படி மொத்தமுள்ள 90 இடங்களில் பா.ஜ.க. 48 இடங்களையும், 39.9 சதவிகித வாக்குகளையும் பெற்றிருக்கிறது. மேலும் காங்கிரஸ் கட்சி 39.3 சதவிகித வாக்குகளை பெற்று 37 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. ஏறத்தாழ சம அளவில் வாக்குகளை பெற்ற காங்கிரஸ் கட்சி 11 இடங்களில் தோல்வியடைந்ததாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது அனைவரையும் அதிர்;ச்சியில் ஆழ்த்தியதோடு, பெருவாரியாக காங்கிரஸ் ஆட்சியமைக்கும் என்பதோடு, 10 ஆண்டுகால மக்கள் விரோத பா.ஜ.க. ஆட்சி அகற்றப்படும் என்ற எதிர்பார்ப்பை சிதைக்கும் வகையில் இந்த முடிவுகள் அமைந்துள்ளன. – தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ.
09-Oct-2024 அறிக்கை நடந்து முடிந்த ஹரியானா, ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து அனைத்...

தொடர்ந்து மோடி ஆட்சியில் நடைபெறும் ஜனநாயக விரோத, பாசிச, பிற்போக்கு நடவடிக்கைகளை முறியடித்து வெற்றிகளை குவிக்க வேண்டுமென தலைவர் ராகுல்காந்தி அவர்களை, தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் 100-வது நாளில் மனதார வாழ்த்துகிறேன், போற்றுகிறேன். – தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ
05-Oct-2024 அறிக்கை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களவையில் அங்கீகரிக்கப்பட்ட எதிர்கட்சித் தலைவர் இல...

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒன்றிய பா.ஜ.க. அரசு அதிகாரங்களை குவித்துக் கொண்டு ஒற்றை ஆட்சி மூலம் செயல்பட்டு வருகிறது. கடந்த தேர்தலில் பா.ஜ.க.வுக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், மாநில கட்சிகளின் ஆதரவோடு கூட்டணி ஆட்சி அமைத்த பிறகும் பா.ஜ.க.வின் மாநில விரோதப் போக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. – தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ
04-Oct-2024 அறிக்கை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒன்றிய பா.ஜ.க. அரசு அதிகாரங்களை குவித்துக் கொண்டு ஒற்றை ...

ஊழலின் ஊற்றுக்கண்ணாகவும், ஆடம்பர அரசியலையும் மேற்கொண்டு வருகிற மோடி ஆட்சியை காமராஜர் ஆட்சியோடு ஒப்பிட்டுப் பேசுவது பெருந்தலைவருக்கு இழைக்கப்படுகிற மிகப்பெரிய துரோகமாகும்.- தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ
22-Sep-2024 அறிக்கை பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் நிர்வாகியான தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் மோடி ஆட்சி ...

இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமும், ஒப்பற்ற தலைவருமான ராகுல்காந்தி அவர்களை எவரும் இழித்து பேசுவதை அனுமதிக்க முடியாது. இத்தகைய அநாகரீகமான வகையில் பேசியுள்ள எச். ராஜாவுக்கு எதிராக கடுமையான எதிர்ப்பை பதிவு செய்கிற வகையில், தமிழகம் முழுவதும் நாளை (17.09.2024) கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்த வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளின் சார்பாக நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் நான் பங்கேற்கிறேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். – தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ
16-Sep-2024 அறிக்கை தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த தமிழ்நாடு பா.ஜ.க.வின் தற்காலிக பொறுப்பாளர் எ...