Tag: congress

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒன்றிய பா.ஜ.க. அரசு அமைந்தது முதற்கொண்டு இந்தி, சமஸ்கிருத திணிப்பு என்பது தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த முயற்சிகளுக்கு இந்தி பேசாத மாநிலங்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், ஆயுள் காப்பீட்டுக் கழக இணைய தள முகப்பை இந்தி மயமாக்கியிருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிற செயலாகும்.- தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ.
19-Nov-2024 அறிக்கை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒன்றிய பா.ஜ.க. அரசு அமைந்தது முதற்கொண்டு இந்தி, சமஸ்கிரு...

மகாராஷ்டிரா மாநில தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் ஒரு ஒட்டுண்ணி கட்சி என்று கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார். குஜராத் மாநில முதலமைச்சராக நரேந்திர மோடி இருந்த போது, கோத்ரா ரயில் எரிப்புக்கு பிறகு, ஆயிரக்கணக்கான அப்பாவி இஸ்லாமியர்கள் படுகொலை செய்யப்பட்ட போது உச்சநீதிமன்ற ஆணையின் பேரில் அமைக்கப்பட்ட ஆர்.கே. ராகவன் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக்குழு நரேந்திர மோடியையும், அமித்ஷாவையும் பல மணிநேரம் விசாரித்தது. விசாரணைக்குப் பிறகு நீதிமன்ற தண்டனையிலிருந்து அவர்கள் தப்பினாலும், அவர்களின் கரங்களில் படிந்த ரத்த கரையை எக்காலத்திலும், எவராலும் துடைக்க முடியாது. அப்பாவி மக்களின் ரத்தத்தை உறிஞ்சிய ஒட்டுண்ணிகளாக இருந்தவர்கள் காங்கிரஸ் கட்சி மீது குற்றம் சாட்டுவதற்கு எந்த அருகதையும் கிடையாது.- தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ.
09-Nov-2024 அறிக்கை மகாராஷ்டிரா மாநில தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் ஒர...