Tag: TNCC
நாகப்பட்டினம், செருதூரை சேர்ந்த மீனவர்கள் மீன் பிடிக்க சென்ற போது மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கியுள்ளனர். இத்தாக்குதலில் செருதூரைச் சேர்ந்த மீனவர்கள் பலர் காயம் அடைந்துள்ளார்கள். மேலும் அவர்களின் வலை உள்ளிட்ட மீன்பிடி சாதனங்களை பறித்துச் சென்றுள்ளனர். இலங்கை கடற்கொள்ளையர்களின் கொடூரச் செயலுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
12/09/2025 அறிக்கை நாகப்பட்டினம், செருதூரை சேர்ந்த மீனவர்கள் மீன் பிடிக்க சென்ற போது மீது இலங்கை கடற்க...
99 கோடி வாக்காளர்களை கொண்ட உலகத்தின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக இந்தியா உள்ளது. இங்கே நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தலை நடத்துவது அரசமைப்புச் சட்டத்தினால் உருவாக்கப்பட்ட இந்திய தேர்தல் ஆணையம். பா.ஜ.க. ஆட்சி அமைவதற்கு முன்பாக தலைமை நீதிபதி உள்ளிட்ட மூவர் குழு இந்திய தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்தது. ஆனால், உச்சநீதிமன்ற ஆணையை உதாசீனப்படுத்துகிற வகையில் தலைமை நீதிபதியை நீக்கி விட்டு, அதற்கு பதிலாக ஒன்றிய பா.ஜ.க. அமைச்சரை சேர்த்து அமைக்கப்பட்ட குழு தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்தது.
04/09/2025 அறிக்கை 99 கோடி வாக்காளர்களை கொண்ட உலகத்தின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக இந்தியா உள்ளது. இங்கே நா...





