திரு திருநாவுக்கரசர்

திரு திருநாவுக்கரசர்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்

மக்களாட்சித் தத்துவத்தின் அடிப்படையினையும் முக்கியத்துவத்தையும் குழந்தைகளும் அறிந்து கொள்ளும் நோக்கில் பள்ளிகளில் மாணவர் தலைவர் தேர்வினை நடைமுறைப்படுத்தி வந்தனர். இம்முறைப்படி பள்ளிமாணவர் தலைவர் தேர்தல் நடைபெறும். பல மாணவர்கள் தேர்தலில் போட்டியிடும் தேர்தல் நாளன்று அனைத்து மாணவர்களும் தங்களுக்கு விருப்பமான மாணவர்களுக்கு வாக்களிப்பர். போட்டியிடும் மாணவர்களின் பேச்சுத்தகுதி அனைவருடன் அன்பாகப் பழகும் பாங்கு, அனைத்துப் பாடத்திலும் முதல் மாணவனாக வரும் தகுதி, போன்ற தகுதிகளின் அடிப்படையில் மாணவ, மாணவியர் தங்களின் தலைவனைத் தேர்வு செய்வர்.

இவ்வாறு நடைபெறும் பள்ளி மாணவர் தேர்வில் நமது திருநாவுக்கரசர் போட்டியிட்டு மாணவர்களின் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று மாணவர் தலைவனாகப் பள்ளிப்பருவத்திலே பெருமை தேடியுள்ளார் என்பது குறிப்பிடத்தகுந்ததாகும்.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் புனித சவேரியார் கல்லூரியில் புதுமுக வகுப்பில் சேர்ந்தார். அங்கும் கல்லூரி மாணவர்களுடன் சேர்ந்து படிப்பைத் தொடர்ந்தார். புதுமுக வகுப்பில் வெற்றி பெற்றுப் பட்டப்படிப்பில் சேரும் தகுதி பெற்றார்.

தஞ்சை மாவட்டம் அதிராமப் பட்டிணத்தில் உள்ள காதர் முகைதீன் கல்லூரியில் சேர்ந்து பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.

அதன்பின், சென்னை சட்டக்கல்லூரியில் இணைந்து சட்டம் பயின்றார். சட்ட நுணுக்கங்களை நன்கு ஆய்நது சட்டம் கற்றார். மூத்தவழக்கறிஞர்கள் சட்ட நுணுக்கங்களை எடுத்துரைத்து வாதாடுகிறார்கள் என்பதை நன்கு கவனித்தார். நீதிமன்றங்களிலே வழக்காடும் முறையை நன்கறிந்தார். சட்டக்கல்லூரியில் படிக்கும் போதே வழக்காடும் முறையில் அளிக்கப்படும் பயிற்சிகளில் தனது திறனை வெளிப்படுத்தி தன்னுடன் கற்கும் வழக்கறிஞர்களாலும் பேராசிரியர்களாலும் பாராட்டப்பட்டார். வழக்கறிஞர் தேர்வில் வெற்றி பெற்று முழுமையான வழக்கறிஞராகும் தகுதியுடன் வெளியே வந்தார். 1976 ல் சென்னை வழக்கறிஞர்கள் சங்கத்தில் தன்னை வழக்கறிஞராகப் பதிவ செய்து கொண்டார்.

புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராக விளங்கிய திரு. கருப்பையா என்பவரிடம் இளம் வழக்கறிஞராக பயிற்சி வழக்கறிஞராகச் சேர்ந்து தனது வழக்கறிஞர் பணியைத் தொடங்கினர்.

திருநாவுக்கரசர் 1977 ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் அறந்தாங்கியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டு திருநாவுக்கரசர் 10,000 வாக்கு வித்தியாசத்தில் வென்று எம்.எல்.ஏ.ஆனார்.

திருநாவுக்கரசரின் நெஞ்ச உணர்வுகளில் விஞ்சி நின்றது ‘தமிழ் வாழ்க ! இந்தி ஒழிக’ என வகுப்பறையின் கரும்பலகையில் துணிச்சலாக எழுதி வைத்து, இந்தி ஆசிரியர், இவ்வாசகத்தை எழுதியது யார் என்று வினவியபோது ‘நான் தான் எழுதினேன்’ எனத் தலைநிமிர்ந்து உரைக்கும் தன்மான வீரராகத் திகழ்ந்தார் திருநாவுக்கரசர். இந்தி ஆசிரியர் திரு.நாகப்பன் அவர்களால் வகுப்பரையில் இருந்து வெளியேற்றப்பட்டு, முட்டீ போட வைக்கப்போட்டு தண்டிக்கப்பட்டார்.

தி.மு.க.வில் தீவிர ஈடுபாடு கொண்டிருந்த திருநாவுக்கரசர் 1972 ஆம் ஆண்டு புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் தனிக்கட்சி தொடங்கிய போது தன்னையும் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தில் இணைத்துக் கொண்டார்.

திருநாவுக்கரசர் தமது சொந்த ஊரான தீயத்தூரில் அ.தி.மு.க.வின் புதிய கிளையை தொடங்கினார். பின்பு அ.தி.மு.க. கட்சியின் கிளைச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதிலிருந்து திருநாவுக்கரசர் தன்னை முழுநேர அரசியல் வாதியாக மாற்றியமைத்துக் கொண்டார்.

1977 ஆம் ஆண்டு சனவரியில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் புதுக்கோட்டை நாடாளுமன்றத் தொகுதியில் வீ.சா.இளஞ்செழியனை வேட்பாளராக எம்.ஜி.ஆர்.நிறுத்தினார்.

1977 ஆம் ஆண்டு அறந்தாங்கி தொகுதியில், போட்டியிட கட்சியின் மூத்தத் தலைவர்கள் பலர் விண்ணப்பித்தனர். 27 வயதே ஆன, திருமணமாகாத, வாலிபத்தின் தலைவாயில் நின்று வசந்தத்தை வரவேற்றுக் கொண்டிருந்த திருநாவுக்கரசரும் விண்ணப்பம் செய்தார். ஆர்.எம். வீரப்பனும் திருநாவுக்கரசருக்கு தனது ஆதரவை தெரிவித்தார்.

தேர்தல் நடந்து முடிந்தது. புரட்சித்தலைவரும் அவரது ஆசி பெற்ற அனைவரும் வெற்றி பெற்றனர். அ.இ.தி.மு.கழகம் பெரும் பெற்றி பெற்றது.

திருநாவுக்கரசரும் பெரும்பான்மை வாக்குடன் வெற்றி பெற்றார்.

புரட்சித்தலைவர், திருநாவுக்கரசர் மேல் வைத்திருந்த அன்பின் வெளிப்பாடாகவும், நம்பிக்கையின் மேலீட்டாலும் வீட்டுவசதித்துறை, கூட்டுறவுத்தறை, கதர் மற்றும் பஞ்சாயத்துத் துறை, உணவுத்துறை, வணிகத்துறை, ஆயத்தீர்வுத்துறை, தொழில்துறை, பல துறைகளின் அமைச்சர் பதவியை அலங்கரிக்கம் அரிய வாய்ப்பினை வழங்கி அழகுபார்த்தார்.

நாடாளுமன்றத் தொகுதி நிதியைத் தம் தெகுதி மேம்பாட்டிற்கு நல்லமுறையில் பயன்தரும் வகையில் செலவு செய்து மக்களது பாராட்டைப் பெற்றுள்ளார். சுமார் 300 பள்ளிகளுக்குக் கட்டிடங்கள் கட்டிக் கொடுத்து மாணவர்களது கல்வித்தரம் உயரவழிவகை செய்துள்ளார்.

தனது ஞானத்தந்தை எம்.ஜி.ஆர். அவர்களின் நினைவாக எம்.ஜி.ஆர் அறக்கட்டளை என்ற ஒரு அமைப்பினை உருவாக்கினார். காங்கிரஸில் இணைந்த பிறகு அது டாக்டர் எம்.ஜி.ஆர், டாக்டர் ராஜீவ் காந்தி அறக்கட்டளை என்றானது.

தொகுதிகளில் உள்ள 300 பள்ளிகளுக்கும் ரூபாய் ஒரு லட்சம் வீதம் கணினி வழங்கியுள்ளார்.

ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான். நியூசிலாந்து, தாய்லாந்து, ஹாங்காங், அமெரிக்கா, துபாய், இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, சைனா, இலங்கை என பூபாளத்த்pன் பலபாகங்களில் தனது காலடிகளைப் பதித்தவர்.

சட்டப்பேரவைத் தலைவராக திரு.முனுஆதி தேர்ந்தெடுக்கப்பட, திருநாவுக்கரசர் சட்டப்பேரவைத் துணைத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.