அரசமைப்புச் சட்டத்தின் நோக்கங்களுக்கு விரோதமாக இந்தியாவின் 90 சதவிகித சொத்துகள் உயர் சாதியினரிடம் குவிந்திருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியை தருகிறது. அந்த அறிக்கை வெளியிட்ட கோடீஸ்வரர்கள் பட்டியலில் பழங்குடியினத்தைச் சார்ந்தவர்கள் ஒருவர் கூட இல்லை. தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ

read more
தமிழகத்தில் இப்பெரும் புயல் மழையால் 1.5 கோடி மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். சேதத்தின் வீரியத்தை கருத்தில் கொண்டு, தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து இடைக்கால நிவாரண நிதியாக ரூபாய் 2000 கோடியை ஒதுக்க வேண்டுமென முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார். கடந்த காலங்களில் புயலினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்காக ஒன்றிய அரசிடம் நிதி கேட்ட போது தொடர்ந்து மறுக்கப்பட்டு வந்ததை அனைவரும் அறிவார்கள். அதேபோல, இம்முறையும் பிரதமர் மோடி தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தமிழ்நாடு முதலமைச்சர் கேட்ட தொகையை ஒதுக்காமல் அலட்சியப் போக்குடன் நடந்து கொள்ளக் கூடாது. இத்தகைய இயற்கை பேரிடர்களால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து மக்களை பாதுகாக்க நிவாரண நிதி வழங்குவதில் அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே அணுகுமுறையை பிரதமர் மோடி கையாள வேண்டும். எனவே, தமிழக முதலமைச்சர் கேட்ட இடைக்கால நிவாரண நிதியை பிரதமர் உடனடியாக விடுவிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.     தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ

அமெரிக்க வழக்கறிஞர்கள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், அதானியும் அவரது உறவினர் சாகர் அதானி உட்பட மொத்தம் 8 பேர் சேர்ந்து இந்திய அதிகாரிகள் 265 மில்லியன் டாலர் அளவுக்கு லஞ்சம் கொடுத்து சோலார் மின் திட்டங்களை பெற்றிருப்பது அம்பலமாகியிருக்கிறது. – தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ.

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டைக்கு அருகில் உள்ள மல்லிப்பட்டினம் அரசு உயர்நிலைப் பள்ளியில் தற்காலிக தமிழாசிரியையாக பணியாற்றிய ரமணி அவர்கள், இன்று காலை பள்ளியின் வராண்டா பகுதியில் இளைஞர் மதன் என்பவரால் பகிரங்கமாக பல பேர் முன்னிலையில் கத்தியால் குத்தப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. இத்தகைய கொடிய கொலைவெறி சம்பவம் நடந்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கின்றேன். – தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ.

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒன்றிய பா.ஜ.க. அரசு அமைந்தது முதற்கொண்டு இந்தி, சமஸ்கிருத திணிப்பு என்பது தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த முயற்சிகளுக்கு இந்தி பேசாத மாநிலங்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், ஆயுள் காப்பீட்டுக் கழக இணைய தள முகப்பை இந்தி மயமாக்கியிருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிற செயலாகும்.- தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ.

19-Nov-2024 அறிக்கை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒன்றிய பா.ஜ.க. அரசு அமைந்தது முதற்கொண்டு இந்தி, சமஸ்கிரு...
read more
கிராம காங்கிரஸ் கமிட்டிகள் மறுசீரமைக்கப்பட்டு, கட்டமைக்க மாவட்ட வாரியாக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். – பட்டியல்

உத்தரபிரதேச மாநிலம், ஜான்சியில் மகாராணி லட்சுமிபாய் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரசவ வார்டின் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் நேற்று இரவு ஏற்பட்ட தீவிபத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் உடல் கருகியும், மூச்சுத் திணறியும் உயிரிழந்த பரிதாப செய்தி அதிர்ச்சியையும், கவலையையும் தருகிறது. மேலும் 16 குழந்தைகள் பலத்த தீக்காயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனையில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாத காரணத்தாலும், நிர்வாக அலட்சியத்தாலும் இத்தகைய கொடூர உயிரிழப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. – தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ.

இன்று உச்சநீதிமன்றத்தில் மொத்தமுள்ள 34 நீதிபதிகளில் பெரும்பான்மையானவர்கள் உயர்சாதியினரை சார்ந்தவர்களாக உள்ளனர். பட்டியலினம், பின்தங்கிய சமுதாயம், சிறுபான்மையின சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் தலா ஒருவர் தான் நீதிபதிகளாக உள்ளனர். இந்நிலையில் இத்தகைய மக்களுக்கு உச்சநீதிமன்றத்தில் நீதி கிடைப்பது கேள்விக்குறியாக்கப்பட்டு வருகிறது. அதேபோல, 11 மத்திய பல்கலைக் கழகங்களுக்கான எஸ்.சி./எஸ்.டி. பிரிவினருக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லாத அவலநிலை உள்ளது. இந்த அநீதியை எதிர்த்துத் தான் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அனைத்து பிரிவினரையும் உள்ளடக்கிய இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென்று தலைவர் ராகுல்காந்தி போராடி வருகிறார். அதைத் தான் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே அவர்களும் தனது தேர்தல் பரப்புரையில் வலியுறுத்தி வருகிறார். இத்தகைய பரப்புரைகளின் மூலம் காங்கிரஸ் கட்சிக்கு கருத்தியல் ரீதியாக பெருகி வரும் பேராதரவை சகித்துக் கொள்ள முடியாத பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சி எஸ்.சி./எஸ்.டி. பிரிவினருக்கு எதிரானது என்ற அவதூறு குற்றச்சாட்டை கூறி வருகிறார். ஆனால் நாட்டு மக்கள் பிரதமர் மோடியின் அவதூறு பிரச்சாரத்திற்கு இரையாகாமல் இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக திரண்டு வருவது கண்கூடாக தெரிகிறது. எனவே, பிரதமர் மோடியின் சந்தர்ப்பவாத அரசியல் நாட்டு மக்களிடம் எந்த வகையிலும் எடுபடப்போவதில்லை. – தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ.

கடந்த 2021 ஆம் ஆண்டே நடத்தப்பட வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தாமல், காலம் தாழ்த்தி வருகிற மோடி அரசு உடனடியாக அதனை நடத்துவதோடு, அதனுடன் சாதி வாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த வேண்டுமென்பது தான் தலைவர் ராகுல்காந்தியின் முக்கியமான கோரிக்கையாகும்..- தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ.

மகாராஷ்டிரா மாநில தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் ஒரு ஒட்டுண்ணி கட்சி என்று கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார். குஜராத் மாநில முதலமைச்சராக நரேந்திர மோடி இருந்த போது, கோத்ரா ரயில் எரிப்புக்கு பிறகு, ஆயிரக்கணக்கான அப்பாவி இஸ்லாமியர்கள் படுகொலை செய்யப்பட்ட போது உச்சநீதிமன்ற ஆணையின் பேரில் அமைக்கப்பட்ட ஆர்.கே. ராகவன் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக்குழு நரேந்திர மோடியையும், அமித்ஷாவையும் பல மணிநேரம் விசாரித்தது. விசாரணைக்குப் பிறகு நீதிமன்ற தண்டனையிலிருந்து அவர்கள் தப்பினாலும், அவர்களின் கரங்களில் படிந்த ரத்த கரையை எக்காலத்திலும், எவராலும் துடைக்க முடியாது. அப்பாவி மக்களின் ரத்தத்தை உறிஞ்சிய ஒட்டுண்ணிகளாக இருந்தவர்கள் காங்கிரஸ் கட்சி மீது குற்றம் சாட்டுவதற்கு எந்த அருகதையும் கிடையாது.- தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ.

09-Nov-2024 அறிக்கை மகாராஷ்டிரா மாநில தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் ஒர...
read more
1 10 11 12 13 14 57