தீரர் சத்தியமூர்த்தி அவர்களின் நினைவுநாளை முன்னிட்டு இன்று காலை 11 மணியளவில் சத்தியமூர்த்தி பவனில் அவரது திருவுருவச் சிலைக்கும், திருவுருவப் படத்திற்கும் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.இந்நிகழ்வில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்கள் திரு. குமரி அனந்தன், திரு. கே.வீ. தங்கபாலு, மாநில நிர்வாகிகள் திரு. ஆர். தாமோதரன், திரு. கீழானூர் ராஜேந்திரன், திரு. டி. செல்வம், திரு. என். அருள்பெத்தையா, திரு. பொன். கிருஷ்ணமூர்த்தி, திரு. எஸ்.வி. ரமணி, வடசென்னை மாவட்டத் தலைவர் திரு. எம்.எஸ். திரவியம், திரு. டி.வி. துரைராஜ், திரு. அடையாறு பாஸ்கரன், திரு. எம். வேலுத்தேவர், திரு. சேரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.