Tag: செல்வப்பெருந்தகை

மகாராஷ்டிரா மாநில தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் ஒரு ஒட்டுண்ணி கட்சி என்று கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார். குஜராத் மாநில முதலமைச்சராக நரேந்திர மோடி இருந்த போது, கோத்ரா ரயில் எரிப்புக்கு பிறகு, ஆயிரக்கணக்கான அப்பாவி இஸ்லாமியர்கள் படுகொலை செய்யப்பட்ட போது உச்சநீதிமன்ற ஆணையின் பேரில் அமைக்கப்பட்ட ஆர்.கே. ராகவன் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக்குழு நரேந்திர மோடியையும், அமித்ஷாவையும் பல மணிநேரம் விசாரித்தது. விசாரணைக்குப் பிறகு நீதிமன்ற தண்டனையிலிருந்து அவர்கள் தப்பினாலும், அவர்களின் கரங்களில் படிந்த ரத்த கரையை எக்காலத்திலும், எவராலும் துடைக்க முடியாது. அப்பாவி மக்களின் ரத்தத்தை உறிஞ்சிய ஒட்டுண்ணிகளாக இருந்தவர்கள் காங்கிரஸ் கட்சி மீது குற்றம் சாட்டுவதற்கு எந்த அருகதையும் கிடையாது.- தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ.
09-Nov-2024 அறிக்கை மகாராஷ்டிரா மாநில தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் ஒர...

பிரதமர் மோடி அறிவித்தபடி கருப்பு பணமோ, கள்ள பணமோ பயங்கரவாத நடவடிக்கைகளோ குறைந்தபாடில்லை. பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்பது வரலாறு காணாத பொருளாதார பேரழிவாகவும், மக்களின் மீது தொடுக்கப்பட்ட கடுமையான தாக்குதலாகவும் தான் அமைந்து விட்டது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்த நவம்பர் 8 ஆம் நாள் மக்கள் சந்தித்த துன்பங்கள், துயரங்கள் குறித்து பிரதமர் மோடி என்றைக்குமே கவலைப்பட்டதாக தெரியவில்லை.- தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ.
08-Nov-2024 அறிக்கை கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 8 அன்று, புழக்கத்தில் இருந்த ரூபாய் 500, ரூபாய் 1000 நோட்டுகளை பண...

இந்தியாவை பொருளாதார வல்லரசாக உயர்த்துவேன் என்று மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீட்டின் அடிப்படையில் பேசுகிற பிரதமர் மோடியின் ஆட்சியில், எவ்வாறு மக்களின் வாழ்க்கை தரமும், மனிதவளமும் குன்றி வறுமையின் கோரப்பிடியில் சிக்கிக் கொண்டிருக்கிறது என்பதை ஐ.நா. சபையின் தரவரிசை பட்டியல் அம்பலப்படுத்தியிருக்கிறது. எந்த புள்ளி விவரத்தையும் ஏற்றுக் கொள்ள மறுக்கிற பா.ஜ.க.வினர், ஐ.நா. சபை ஆய்வு செய்து வெளியிட்ட அறிக்கைக்கு என்ன பதில் கூறப் போகிறார்கள் ? மக்களை மதரீதியாக பிளவுபடுத்தி, வாக்கு வங்கியை விரிவுபடுத்தி தேர்தலில் வெற்றி பெறுவதை நோக்கமாக கொண்ட ஆர்.எஸ்.எஸ். வழிவந்த பா.ஜ.க.விற்கு மக்களின் உண்மையான வளர்ச்சி மீது அக்கறையில்லை என்பதையே ஐ.நா. சபையின் புள்ளி விவரம் சுட்டிக் காட்டுகிறது. இத்தகைய அவலநிலை நீடிக்குமேயானால், பா.ஜ.க. ஆட்சியாளர்கள் நாட்டு மக்களின் கடும் கோபத்தை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறேன். – தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ.
18-Oct-2024 அறிக்கை கடந்த 2014, 2019 மக்களவை தேர்தல் பரப்புரைகளின் போது, 2024 ஆம் ஆண்டுக்குள் இந்திய பொருளாதாரத்...