இந்தியாவில் ஜனநாயகம் தழைக்க வேண்டும் என்பதற்காகத் தான் தலைமை தேர்தல் ஆணையம் மற்றும் ஆணையர்களின் தேர்வு, கடந்த காலங்களில் பிரதமர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அல்லது நீதிபதி, மக்களவை எதிர்கட்சித் தலைவர் ஆகியோரை கொண்ட குழுவின் பரிந்துரையின் பேரிலேயே தேர்வு செய்யப்பட்டது. ஆனால், சமீபத்தில் பிரதமர் மோடி ஆட்சியில் செய்த திருத்தத்தின்படி, மூவர் தேர்வுக் குழுவில் தலைமை நீதிபதியை அகற்றி விட்டு ஒன்றிய அமைச்சரை குழுவில் சேர்க்கப்பட்டது. இதன்மூலம் மூன்றில் இரண்டு பேர் பெரும்பான்மை என்ற அடிப்படையில் எதிர்கட்சித் தலைவரின் பரிந்துரை புறக்கணிக்கப்பட்டு, பிரதமர் மோடி யாரை விரும்புகிறாரோ, அவரைத் தான் தலைமை தேர்தல் ஆணையராகவோ, ஆணையர்களாகவோ நியமிப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டு விட்டது. இந்நிலை தேர்தல் ஜனநாயகத்திற்கே மிகப்பெரிய ஆபத்து, பெரும் கேடு என்று தலைவர் ராகுல்காந்தி கடுமையாக விமர்சனம் செய்தார். அதையெல்லாம் புறக்கணித்த காரணத்தினால் இன்றைக்கு தேர்தல் ஆணையமே பிரதமர் மோடியின் கைப்பாவையாக மாறி விட்டது. இதை விட 140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்திய ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய ஆபத்து வேறு எதுவும் இருக்க முடியாது. இத்தகைய ஜனநாயக கொடுமையை எதிர்த்து போராட வேண்டிய அவசியம் காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சியினருக்கு ஏற்பட்டிருக்கிறது. ஜனநாயகம் செழிக்க வேண்டுமென்றால், தேர்தல் ஆணையம் நேர்மையாக, பாரபட்சமில்லாமல் செயல்பட வேண்டும். அத்தகைய சூழல் ஏற்படுவதன் மூலமே இந்தியாவில் ஜனநாயகம் காப்பாற்றப்படும்.   தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ

read more
நாடாளுமன்றத்தில் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களை இழிவுபடுத்திப் பேசிய அமித்ஷா பதவி விலக வேண்டும், நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இன்று நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் – தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ

ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஜனநாயக விரோத, சர்வாதிகார நடவடிக்கைகளை கண்டித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப அனுமதி மறுத்ததன் விளைவாக மக்கள் மன்றத்தில் இப்பிரச்சினையை கொண்டு செல்கிற வகையில், ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்தை காங்கிரஸ் கட்சி நடத்துகிறது. இதில் பெருந்திரளான காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்று மோடி ஆட்சியின் சர்வாதிகாரத்தை முறியடிக்க முன்வர வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.   – தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ

தமிழ்நாட்டில் உள்ள கிராம ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளில் உள்ள நம் இயக்கத்தின் அடித்தள அமைப்புகளை சீரமைக்க வேண்டும் என்று அகில இந்திய காங்கிரஸ் தலைமை வழிகாட்டியுள்ளது. அதன்படி நம் இயக்க அடிப்படை அமைப்புகளை சீரமைக்க தமிழ்நாடு காங்கிரஸ் ஒரு சிறப்பு திட்டத்தை செயல்படுத்த உள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தயாரித்துள்ள இந்த சிறப்பு திட்டத்திற்கு அகில இந்திய காங்கிரஸ் தனது ஒப்புதலை தந்துள்ள நல்ல செய்தியை உங்களுக்கு தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். – தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ

அரசமைப்புச் சட்டத்தின் நோக்கங்களுக்கு விரோதமாக இந்தியாவின் 90 சதவிகித சொத்துகள் உயர் சாதியினரிடம் குவிந்திருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியை தருகிறது. அந்த அறிக்கை வெளியிட்ட கோடீஸ்வரர்கள் பட்டியலில் பழங்குடியினத்தைச் சார்ந்தவர்கள் ஒருவர் கூட இல்லை. தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ

தமிழகத்தில் இப்பெரும் புயல் மழையால் 1.5 கோடி மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். சேதத்தின் வீரியத்தை கருத்தில் கொண்டு, தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து இடைக்கால நிவாரண நிதியாக ரூபாய் 2000 கோடியை ஒதுக்க வேண்டுமென முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார். கடந்த காலங்களில் புயலினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்காக ஒன்றிய அரசிடம் நிதி கேட்ட போது தொடர்ந்து மறுக்கப்பட்டு வந்ததை அனைவரும் அறிவார்கள். அதேபோல, இம்முறையும் பிரதமர் மோடி தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தமிழ்நாடு முதலமைச்சர் கேட்ட தொகையை ஒதுக்காமல் அலட்சியப் போக்குடன் நடந்து கொள்ளக் கூடாது. இத்தகைய இயற்கை பேரிடர்களால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து மக்களை பாதுகாக்க நிவாரண நிதி வழங்குவதில் அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே அணுகுமுறையை பிரதமர் மோடி கையாள வேண்டும். எனவே, தமிழக முதலமைச்சர் கேட்ட இடைக்கால நிவாரண நிதியை பிரதமர் உடனடியாக விடுவிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.     தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ

அமெரிக்க வழக்கறிஞர்கள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், அதானியும் அவரது உறவினர் சாகர் அதானி உட்பட மொத்தம் 8 பேர் சேர்ந்து இந்திய அதிகாரிகள் 265 மில்லியன் டாலர் அளவுக்கு லஞ்சம் கொடுத்து சோலார் மின் திட்டங்களை பெற்றிருப்பது அம்பலமாகியிருக்கிறது. – தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ.

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டைக்கு அருகில் உள்ள மல்லிப்பட்டினம் அரசு உயர்நிலைப் பள்ளியில் தற்காலிக தமிழாசிரியையாக பணியாற்றிய ரமணி அவர்கள், இன்று காலை பள்ளியின் வராண்டா பகுதியில் இளைஞர் மதன் என்பவரால் பகிரங்கமாக பல பேர் முன்னிலையில் கத்தியால் குத்தப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. இத்தகைய கொடிய கொலைவெறி சம்பவம் நடந்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கின்றேன். – தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ.

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒன்றிய பா.ஜ.க. அரசு அமைந்தது முதற்கொண்டு இந்தி, சமஸ்கிருத திணிப்பு என்பது தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த முயற்சிகளுக்கு இந்தி பேசாத மாநிலங்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், ஆயுள் காப்பீட்டுக் கழக இணைய தள முகப்பை இந்தி மயமாக்கியிருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிற செயலாகும்.- தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ.

19-Nov-2024 அறிக்கை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒன்றிய பா.ஜ.க. அரசு அமைந்தது முதற்கொண்டு இந்தி, சமஸ்கிரு...
read more
கிராம காங்கிரஸ் கமிட்டிகள் மறுசீரமைக்கப்பட்டு, கட்டமைக்க மாவட்ட வாரியாக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். – பட்டியல்