தமிழகத்தில் புரட்சிகரமாக வேளாண்மை நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதோடு, விவசாயத்தோடு தொடர்புடைய வளர்ச்சிக்காக 34 ஆயிரத்து 220 கோடியே 64 லட்சத்து 39 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது மிகுந்த வரவேற்புக்குரியது. இதன்மூலம், தமிழக விவசாயிகளிடையே மிகுந்த வரவேற்பை பெறுவதோடு, அவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்துகிற முயற்சியில் ஈடுபட்ட தமிழக முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களையும், வேளாண்மை நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்த வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் திரு. எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்களையும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் மனதாரப் பாராட்டுகிறேன்.
14 Aug 2021 அறிக்கை தமிழக வரலாற்றில் முதல் முறையாக 2021-22 ஆம் ஆண்டிற்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கையை, அமைச்சர் திரு. எம்.ஆர்.கே. பன்னீர்செல்வ...