தொழில்துறை வளர்ச்சி

பெருந்தலைவர் காமராசர் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் விவசாயம் மற்றும் நீர்ப்பாசனத் திட்டங்கள்

கீழ்பவானித் திட்டம் : பெருந்தலைவர் காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் கோயம்புத்தூரில் பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி நீர்த்தேக்கப்பட்டது. இதன் மூலம் 2 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான விவசாய நிலங்களுக்கு பாசன வசதி கிடைத்தது. 

மணிமுத்தாறு திட்டம் : பெருந்தலைவர் காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் தாமிரபரணி ஆற்றில் இணையும் கிளை நதியான மணிமுத்தாறு நதியின் குறுக்கே கட்டப்பட்ட இந்த நீர்த்தேக்கத்தின் மூலம் திருநெல்வேலி மாவட்டத்தின் 1 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான விவசாய நிலங்களுக்கு பாசன வசதி கிடைத்தது. 

மலம்புழாத் திட்டம் : மலபார் மாவட்டத்தில் பாரதப் புழா நதியின் குறுக்கே ஒரு கிளை நதியான மலம்புழா நதியின் குறுக்கே அணை கட்டப்பட்டது. இதனால் 40,000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்றது. 

மேட்டூர் கால்வாய்த் திட்டம் : சேலம், கோயம்புத்தூர் மாவட்டங்களில் சுமார் 6 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பு பாசன வசதி பெறுவதற்காக மேட்டூர் அணையில் இருந்து வாய்க்கால் அமைக்கப் பட்டது. 

ஆரணியாறு திட்டம் : செங்கல்பட்டு மாவட்டம் திருவள்ளூர் தாலுகாவில் அமைக்கப்பட்டது.

அமராவதித் திட்டம் : கோவை மாவட்டம் உடுமலைப் பேட்டையில் அமராவதி ஆற்றின் குறுக்கே அமைக்கப் பட்ட நீர்த்தேக்கத் திட்டம். 

வைகைத் திட்டம் : பெரியாறு அணையிலிருந்து பிரிக்கப் படும் கூடுதல் நீரை பாதுகாப்பாக இணைத்து வைகை நதியின் குறுக்கே கட்டப்பட்டது. 

சாத்தனூர்த் திட்டம் : வட ஆற்காடு ( வேலூர் ) மாவட்டம் சாத்தனூருக்கு அருகில் ஓடும் பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்டது. இதன் மூலம் 40000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றது. 

கிருஷ்ணகிரி திட்டம் : கிருஷ்ணகிரி தாலுகாவில் பெண்ணையாறு நதியின் குறுக்கே அணை கட்டப்பட்டது. 

திருச்சி மாவட்டத்தின் புல்லம்பாடி வாய்க்கால் திட்டம் மற்றும் புதிய கட்டளைத் திட்டம். 

தென் ஆற்காடு மாவட்டம் விடூரில் நீர்தேக்கத் திட்டம். 

கன்னியாகுமரி மாவட்டத்தில் 3 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பு பயன்பெறுவதற்காக பெரிய ஏரிகளை புதுப்பித்தல், கொடையாறு வாய்க்கால்களை மறுசீரமைப்பு செய்தல் போன்ற நடுத்தர நீர்ப்பாசனத் திட்டங்கள். 

கன்னியாகுமரி மாவட்டத்தில் நெய்யாறு திட்டத்தின் இரண்டாம் பாகம். இதனால் சுமார் 10,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம்

இத்திட்டத்தினால் கோயம்புத்தூர் மாவட்டத்தில் சுமார் 3 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பு பாசன வசதி பெறுவதுடன், நீர் மின்சாரமும் உற்பத்தி செய்யப் படுகிறது. 


இத்திட்டத்தில் 6 பெரிய அணைகளும், 2 சிறிய அணைகளும், 12 மைல் நீள மலைக்குகையும், 120 மைல் நீள கால்வாய்களும் மற்றும் நூற்றுக்கணக்கான மைல் நீள சிறு வாய்க்கால்களும் அடங்கும். 

பரம்பிக்குளம் அணை 180 அடி உயரமும் மேல்மட்டத்தில் ஆயிரம் அடி நீளமும் கொண்டது. இதன் மொத்த கொள்ளளவு 1 லட்சத்து 68 ஆயிரம் கன அடி.