![](http://wpts.inctamilnadu.in/wp-content/uploads/2019/06/TSS-RAjan-1024x1024.jpg)
பெயர் : திருவேங்கிமலை சேஷ செளந்தர ராஜன்
பிறப்பு : கி.பி 1880
இறப்பு : கி.பி 1953
இடம் : சென்னை, இந்தியா
புத்தகங்கள் : வரலாற்று
நுலான நினைவு அலைகள், வ.வே.சு. ஐயர் பற்றிய நூல்
வகித்த பதவி : மருத்துவர், அரசியல்வாதி
வரலாறு:-வாழ்க்கை வரலாறு
திருவேங்கிமலை சேஷ செளந்தர
ராஜன் அல்லது டி.எஸ்.எஸ்.ராஜன் ஒரு தமிழக அரசியல்வாதி, மருத்துவர் மற்றும் இந்திய
விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். 1937-1939 காலகட்டத்தில் சென்னை
மாகாணத்தின் அமைச்சராக இருமுறை பணியாற்றியவர்.
சீரங்கத்தில் வடகலை
ஐய்யங்கார் சாதியில் பிறந்த ராஜன், திருச்சி புனித வளனார் கல்லூரியில் கல்வி
கற்றார். சென்னை ராயபுரம் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்று பட்டம்
பெற்றார். பர்மாவுக்கு குடிப்யெர்ந்து ரங்கூன் நகரில் மருத்துவராகப்
பணியாற்றினார். 1907ல் இங்கிலாந்து சென்று மருத்துவ மேல்படிப்பு
படித்து ஃப்.ஆர்.சி.எஸ்(FRCS) பட்டம் பெற்றார். பர்மாவில்
பல ஆண்டுகள் மருத்துவப் பணியாற்றிய பின்னர் இந்தியா திரும்பி “ராஜன்
மருத்துவமனை” என்ற பெயரில் தனி மருத்துவமனை தொடங்கினார்.
ராஜாஜியுடன் ஏற்பட்ட
நட்பினால் இந்தியத் தேசியக் காங்கிரசில் இணைந்தார் ராஜன். ரௌலட் சட்டங்களுக்கு எதிரான
போராட்டங்களில் பங்கு கொண்டு சிறை சென்றார். 1920-1922ல் கிலாபத் ஒருங்கிணைப்பு
குழுவில் உறுப்பினராக இருந்தார். உப்பு சத்தியாகிரகத்தில் பங்கேற்றுப் பதினெட்டு
மாதங்கள் சிறை தண்டனை பெற்றார். இந்தியத் தேசியக் காங்கிரசில் தேசிய அளவிலும்
மாநில அளவிலும் பொதுச் செயலாளர், தலைவர், மாநிலச் செயலாளர் என பல
பதவிகளை வகித்தார்.
1934-1936ல் மத்திய சட்டமன்ற
உறுப்பினராகப் பணியாற்றினார். 1937 சட்டமன்றத் தேர்தலில்
வெற்றி பெற்று சென்னை மாகாண சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ராஜாஜி
தலைமையிலான அமைச்சரவையில் பொதுச் சுகாதாரத் துறை அமைச்சராகப் பணியாற்றினார். 1939ல் இரண்டாம் உலகப் போரில்
இந்தியா ஈடுபடுத்தப்படுவதை கண்டித்து காங்கிரசு அமைச்சரவைகள் அனைத்தும் பதவி
விலகின.
1946 தேர்தலில் காங்கிரசு வெற்றி
பெற்று மீண்டும் பதவியேற்ற போது த.பிரகாசத்தின் அமைச்சரவையில் உணவு மற்றும் பொதுச்
சுகாதாரத்துறை அமைச்சரானார். அடுத்த ஐந்தாண்டுகளில் மோட்டார் வாகனத் துறை, தொழிலாளர் நலம், இந்து அறநிலையத்துறை போன்ற
பல துறைகளுக்கு அமைச்சராக இருந்தார். 1953ல் மரணமடைந்தார். வ.வே.சு.
ஐயர் பற்றிய ஒரு நூலையும், “நினைவு அலைகள்” என்ற
தன் வரலாற்று நூலையும் எழுதியுள்ளார்.