Oct – 27

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கே. எஸ். அழகிரி அவர்கள் வெளியிடும் அறிக்கை.

திருநெல்வேலி மாவட்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திரு. பிரம்மா மீது வன்முறைத் தாக்குதல் நடைபெற்றதை அறிந்து மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். நுகர்வோர் நலனை பாதுகாக்கிற வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்ததன் காரணமாக அவர் மீது சமூக விரோதிகளை ஏவிவிட்டு கடுமையான தாக்குதல் நடத்தியிருப்பதாக அறிகிறேன். இந்த சம்பவத்தை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திரு. பிரம்மா தாக்கப்பட்டது குறித்து காவல்துறையினர் எடுத்திருக்கிற நடவடிக்கை போதுமானதாக இல்லை. தாக்கியவர்கள் மீது மேலும் கடுமையான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். இத்தகைய நடவடிக்கைகள் மூலமே சமூகவிரோதிகளின் வன்முறை வெறியாட்டத்தை தடுத்து நிறுத்த முடியும்.

கடுமையான தாக்குதலுக்கு உள்ளான திரு. பிரம்மநாயகம் என்கிற பிரம்மாவிற்கு நீதி கிடைக்கிற வகையில் காவல்துறையினர் விரைந்து செயல்பட வேண்டும். அப்படி செயல்படவில்லை எனில் திருநெல்வேலி மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் கடுமையான போராட்டங்களை சந்திக்க வேண்டி வரும் என்பதை எச்சரிக்கையாக கூற விரும்புகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *