Feb 7
தமிழ்நாடு காங்கிரஸ் செய்திக்குறிப்பு:
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ராகுல்காந்தி அவர்களால் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமிக்கப்பட்ட திரு. கே.எஸ். அழகிரி அவர்களும், செயல் தலைவர்களாக நியமிக்கப்பட்ட திரு. எச். வசந்தகுமார், எம்.எல்.ஏ., டாக்டர் கே. ஜெயக்குமார், டாக்டர் எம்.கே. விஷ்ணுபிரசாத், திரு. மயூரா ஜெயக்குமார், திரு. மோகன் குமாரமங்கலம் ஆகியோர் பதவியேற்பு விழா நாளை (8.2.2019) மாலை 4 மணியளவில் சென்னை சத்தியமூர்த்தி பவன் முகப்பில் அமைக்கப்பட்டுள்ள மேடையில் நடைபெற உள்ளது.
முன்னதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மற்றும் செயல் தலைவர்கள் காலை 10 மணி முதல் சென்னை தி.நகர் திருமலைப் பிள்ளை சாலையில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலை, சைதாப்பேட்டை சின்னமலையில் உள்ள ராஜீவ்காந்தி சிலை, வால்டாக்ஸ் சாலையில் அமைந்துள்ள அன்னை இந்திரா காந்தி சிலை ஆகியவற்றிற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர்.
இவ்விழாவில் தமிழக பொறுப்பாளர்களான அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர்கள் திரு. சஞ்ஜய் தத், டாக்டர் சிரிவல்ல பிரசாத் ஆகியோர் முன்னிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர்கள், முன்னாள் நாடாளுமன்ற, இன்னாள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், முன்னணி மற்றும் பிரிவுகளின் தலைவர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான செயல்வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.