உயிர்களில் பேதம் இல்லை; எல்லா உயிர்களும் ஒன்றே” என்ற உயரிய கொள்கையை இந்த மண்ணில் முதன்முறையாக உறுதியாக நிலைநிறுத்தி,சாதி, பேதம், ஏற்றத் தாழ்வு ஆகிய அனைத்தையும் தாண்டி மனிதநேயமே வாழ்வின் அடித்தளம் என்பதை உலகிற்கு எடுத்துச் சொன்ன மகத்தான அறச்சிந்தனையாளர் ஆவார் என்பதும்,இந்த வழிபாட்டு நிகழ்வில் ஆழ்ந்த பொருளுடன் நினைவுகூரப்பட்டது.

07/02/2026 அறிக்கை

திருச்சி ஸ்ரீரங்கத்தில் அமைந்துள்ள
ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதசுவாமி திருக்கோவில் திருத்தலத்தில்,
உயிர்போடும் உண்மையோடும் உயிரோடும் காட்சியளிக்கும்
பகவத் ஸ்ரீ ராமானுஜர் அவர்களின் திருச்சன்னதியில், திரு கு செல்வப் பெருந்தகை,
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் அவர்கள் இன்று பக்தியுடனும் பணிவுடனும் விஜயம் செய்து வழிபாடு மேற்கொண்டார்.

பகவத் ஸ்ரீ ராமானுஜர் அவர்கள்,
“உயிர்களில் பேதம் இல்லை; எல்லா உயிர்களும் ஒன்றே” என்ற உயரிய கொள்கையை இந்த மண்ணில் முதன்முறையாக உறுதியாக நிலைநிறுத்தி,
சாதி, பேதம், ஏற்றத் தாழ்வு ஆகிய அனைத்தையும் தாண்டி மனிதநேயமே வாழ்வின் அடித்தளம் என்பதை உலகிற்கு எடுத்துச் சொன்ன மகத்தான அறச்சிந்தனையாளர் ஆவார் என்பதும்,
இந்த வழிபாட்டு நிகழ்வில் ஆழ்ந்த பொருளுடன் நினைவுகூரப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, ஸ்ரீரங்கம் திருத்தலத்திலேயே அமைந்துள்ள
துலுக்க நாச்சியார் சன்னதி, ஸ்ரீரங்கம் திருச்சன்னதியிலும் தலைவர் அவர்கள் வழிபாடு மேற்கொண்டார்.

இந்த புனித விஜயத்தின் போது,
தமிழ் மக்களின் நலன், சமூக நல்லிணக்கம், சமத்துவம், மனிதநேயம் மற்றும் அமைதியான சமூக வாழ்வு வலுப்பெற வேண்டும் என்பதற்காகவும்,
திருப்பெரும்புதூர் தொகுதி மக்களின் முன்னேற்றம், அடிப்படை தேவைகள் மற்றும் வாழ்வாதார பாதுகாப்பு உறுதி பெற வேண்டும் என்பதற்காகவும்,
உலகெங்கிலும் வாழும் புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் பாதுகாப்பும் மரியாதையும் உறுதியாக வேண்டும் என்பதற்காகவும்,
இந்திய மக்கள் அனைவரிடமும் ஒற்றுமையும் சகோதரத்துவ உணர்வும் நிலைபெற வேண்டும் என்பதற்காகவும்
மனம் உருகி பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டது.

பகவத் ஸ்ரீ ராமானுஜர் அவர்கள் வலியுறுத்திய உயிர்களில் பேதம் இல்லை என்ற அறப்பாதையும்,
ஸ்ரீரங்கத்தில் துலுக்க நாச்சியார் திருச்சன்னதி எடுத்துரைக்கும் சமரசம், சகிப்புத்தன்மை மற்றும் நல்லிணக்க மரபும்,
இன்றைய சமூகத்திற்கு மிகப் பெரிய ஒளிவிளக்காகத் திகழ வேண்டும் என்ற பொதுநல எண்ணத்துடன் இந்த விஜயம் அமைந்தது.

மேலும், மதவாதத் துவேஷத்தை சமூகத்தில் பரப்ப நினைக்கும் புல்லுருவிகள் அனைவரும்,
திருச்சி ஸ்ரீரங்கம் வந்து பகவத் ஸ்ரீ ராமானுஜரையும் வழிபட்டு,
துலுக்க நாச்சியார் திருச்சன்னதியிலும் வழிபட்டு,
அதன் பின்னாவது சமூகத்தில் பதற்றமற்ற, அமைதியான, நல்லிணக்கம் நிறைந்த சூழலை உருவாக்க நினைப்பார்கள் என்ற நம்பிக்கையையும்,
இந்த புனித விஜயம் மக்களிடையே மனிதநேயமும் சமூக ஒற்றுமையும் மேலும் வலுப்பெறச் செய்யும் ஒரு அறப்பாதை நினைவூட்டலாக அமையும் என்ற எதிர்பார்ப்பையும்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தெரிவித்துக்கொள்கிறது.