பட்டாசு விபத்தில் உயிரிழந்த பெண்கள் உட்பட ஐந்து தொழிலாளர்களுக்கும், இழப்பீட்டு தொகையாக தலா ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன். இறந்த தொழிலாளர் குடும்பங்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

அறிக்கை – 11-Nov-2022

மதுரை, திருமங்கலம் அருகே பட்டாசு ஆலை தீவிபத்தில் பெண்கள் உட்பட 5 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்த பரிதாப சம்பவம் நெஞ்சை உலுக்குவதாக இருக்கிறது. பட்டாசு வெடித்து சிதறியபோது எடைபோடும் பகுதியில் இருந்த பத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் படுகாயம் அடைந்துள்ளனர். பட்டாசுகள் தயாரித்து குவித்து வைக்கப்பட்டபோது உராய்வில் தீவிபத்து ஏற்பட்டிருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

பொதுவாக பட்டாசு தொழிலில் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு கட்டுப்பாடுகள் உரிய முறையில் கடைபிடிக்காத காரணத்தால் இத்தகைய விபத்துகள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன. இதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை உரிய முறையில் எடுக்காத காரணத்தினால் பெரும்பாலான விபத்துகளில் உயிரிழப்பவர்கள் ஏழை, எளிய அப்பாவி தொழிலாளர்கள் தான். இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்குகிற வகையில் பட்டாசு தொழிலுக்கு உரிய கட்டுப்பாடுகளை விதிப்பதோடு, அவை முறையாக பின்பற்றப்படுகின்றனவா என்பதையும் கண்காணிக்க வேண்டும்.

பட்டாசு விபத்தில் உயிரிழந்த பெண்கள் உட்பட ஐந்து தொழிலாளர்களுக்கும், இழப்பீட்டு தொகையாக தலா ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன். இறந்த தொழிலாளர் குடும்பங்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

தலைவர் திரு கே.எஸ். அழகிரி