தமிழகத்தில் 5 முறை முதலமைச்சராக இருந்து தமிழ்ச் சமுதாயத்தின் வளர்ச்சிக்கு தம்மை அர்ப்பணித்துக் கொண்ட முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களை இத்தகைய கீழ்த்தரமான செயல்கள் மூலம் அவரது புகழை சிறுமைப்படுத்த முடியாது. சிலைகளை சேதப்படுத்துவது அநாகரீகமான செயலாகும். மறைந்த தலைவர்களின் சிலைகளை அவமதிப்பதைத் தடுத்து நிறுத்துவதற்கு காவல்துறையினர் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

15/072025

சேலம், அண்ணா பூங்கா முன்பு அமைக்கப்பட்டிருந்த, முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் சிலை மீது சில விஷமிகள் கருப்பு பெயிண்ட் ஊற்றி சேதப்படுத்தியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கின்றேன். இதற்குக் காரணமானவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் 5 முறை முதலமைச்சராக இருந்து தமிழ்ச் சமுதாயத்தின் வளர்ச்சிக்கு தம்மை அர்ப்பணித்துக் கொண்ட முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களை இத்தகைய கீழ்த்தரமான செயல்கள் மூலம் அவரது புகழை சிறுமைப்படுத்த முடியாது. சிலைகளை சேதப்படுத்துவது அநாகரீகமான செயலாகும். மறைந்த தலைவர்களின் சிலைகளை அவமதிப்பதைத் தடுத்து நிறுத்துவதற்கு காவல்துறையினர் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

(கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ.)