27/09/2025 அறிக்கை
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு விஜய் அவர்களின் கரூரில் நடைபெற்ற கூட்டத்தில் மக்கள் நெரிசல் காரணமாக 30 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கும் செய்தி நெஞ்சை பதற வைக்கிறது. உயிரிழப்பு இன்னும் அதிகரிக்க கூடும் என்று கவலை தருகிற செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. மருத்துவமனையில் பலர் காயமுற்று அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். நெரிசலில் சிக்கி இறந்தவர்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கும் படி தமிழக முதலமைச்சரை கேட்டுக்கொள்கிறேன். அதே நேரத்தில் நெரிசலால் அப்பாவிகள் 30 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த நிகழ்வுக்கு யார் காரணம் என்பதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இந்த உயிரிழப்பு குறித்து ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் பாரபட்சமற்ற நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்த சோகமான சம்பவத்திற்கு யார் காரணம் என்பதை கண்டறிகிற வகையில் நீதி விசாரணை அமைய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
(கு. செல்வபெருந்தகை, எம்.எல்.ஏ.)