அன்புள்ள திரு மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு,தங்கள் தந்தை, தலைவர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் இந்த நினைவு நாளில், நவீன தமிழகத்தை வடிவமைப்பதில் அவரது மகத்தான பங்களிப்பை நான் கெளரவிக்க விரும்புகிறேன்.தலைவர் கலைஞர் எம்.கருணாநிதி அவர்கள் சமூகப் புரட்சியின் மூலம் லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை முன்னேற்றிய முக்கிய கட்டமைப்பாளர் என்பது மட்டுமல்ல, அவர் நமது கூட்டாட்சி அரசியலில் பல்வேறு பிராந்திய அபிலாஷைகளை அங்கீகரிப்பதை உறுதி செய்ய போராடினார். அவர் அமைத்த அடித்தளம் மக்கள் தங்கள் பிராந்திய கலாச்சாரங்கள் மற்றும் அடையாளங்களைத் தொடர்வதற்கும் பாதுகாப்பதற்கும் தொடர்ந்து ஊக்குவிக்கிறது. அது மேலும் உண்மையிலேயே அனைவரையும் உள்ளடக்கிய தேசத்திற்காக பாடுபடுகிறது.பிற்போக்குத்தனமான மதிப்புகளை திணிக்கும் முயற்சிக்கு எதிராக நாம் போராடும் இன்றைய சூழலில், உங்கள் தந்தையின் வீரமிக்க போராட்டம் மற்றும் வளர்ச்சிக்கான கொள்கைகளை முன்னெடுத்து செல்ல அவர் உருவாக்கிய மக்கள் இயக்கத்திலிருந்து நாம் வலிமை பெறுகிறோம். அவரது வாழ்க்கை நமது இந்த பயணத்தில் வழிகாட்டும். – ராகுல் காந்தி.