FEB – 20 இரங்கல் செய்தி

Feb 20

தமிழக காங்கிரசின் மூத்த தலைவரும், முன்னாள் சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினருமான திரு. வி. ராஜசேகரன் அவர்களது சகோதரர் திரு. வி. பாண்டியன் அவர்கள் மரணமடைந்த செய்தி கேட்டு அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்.

நீண்டகாலமாக காங்கிரஸ் இயக்கத்திற்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்ட திரு. வி. ராஜசேகரன் அவர்களது குடும்பம் என்பதை யாரும் மறக்க இயலாது. அந்த குடும்பத்திலிருந்து காங்கிரஸ் இயக்கத்தில் பற்று கொண்டிருந்த திரு. வி. பாண்டியன் அவர்களது மறைவு உண்மையிலேயே ஈடு செய்ய முடியாதது.

அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலை திரு. வி. ராஜசேகரன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.

(கே.எஸ். அழகிரி)

Leave a Reply