12-Dec-2024
அறிக்கை
தமிழ்நாட்டில் உள்ள கிராம ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளில் உள்ள நம் இயக்கத்தின் அடித்தள அமைப்புகளை சீரமைக்க வேண்டும் என்று அகில இந்திய காங்கிரஸ் தலைமை வழிகாட்டியுள்ளது. அதன்படி நம் இயக்க அடிப்படை அமைப்புகளை சீரமைக்க தமிழ்நாடு காங்கிரஸ் ஒரு சிறப்பு திட்டத்தை செயல்படுத்த உள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தயாரித்துள்ள இந்த சிறப்பு திட்டத்திற்கு அகில இந்திய காங்கிரஸ் தனது ஒப்புதலை தந்துள்ள நல்ல செய்தியை உங்களுக்கு தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.
தமிழ்நாட்டில் உள்ள 12525 கிராம ஊராட்சிகள், 490 பேரூராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 25 மாநகராட்சிகள் அனைத்திலும் உள்ள கிராம மற்றும் வார்டு கமிட்டிகளின் தற்போதைய கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகளின் நிலையை சரிபார்த்து கட்டமைப்புகள் இல்லாத வட்டார கமிட்டிகளின் கீழ் இயங்கும் கிராம கமிட்டிகள் மற்றும் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதியில் உள்ள வார்டு கமிட்டிகளை உருவாக்குவதும், அல்லது சரியாக செயல்படாத அமைப்புகளை மறுசீரமைத்து செயல்படும் கமிட்டிகளாக மாற்றி அமைப்பதும் இந்த திட்டத்தின் அடிப்படை நோக்கமாகும்.
இந்த சிறப்பு திட்டத்தை செயல்படுத்த அகில இந்திய காங்கிரசின் ஒப்புதலோடு ஒரு மேலாண்மை ஒருங்கிணைப்புக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. அக்குழுவின் தலைவராக நமது இயக்கத்தின் மூத்த தலைவரும், மேனாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினருமான திரு. சா. பீட்டர் அல்போன்ஸ் அவர்கள் செயல்படுவார். அவர் தலைமையில் உள்ள ஒருங்கிணைப்புக் குழுவில் நமது இயக்கத்தின் தொண்டர்கள் மற்றும் தலைவர்களோடு நன்கு அறிமுகமானவர்களும், நமது இயக்க பணிகளில் நீண்ட அனுபவம் பெற்ற 17 உறுப்பினர்களை நியமனம் செய்துள்ளோம்.
இதில் மத்திய ஒருங்கிணைப்புக் குழு அலுவலக பொறுப்பாளர்களாக நான்கு உறுப்பினர்களும், மூன்று நாடாளுமன்ற தொகுதிகள் ஒரு மண்டலமாக கணக்கிடப்பட்டு 13 உறுப்பினர்கள் மண்டல பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களோடு இணைந்து பணி செய்ய 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் 39 நாடாளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர்களை நியமித்துள்ளோம். ஒருங்கிணைப்புக் குழு மற்றும் நாடாளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர்களோடு இணைந்து களப்பணியாற்றிடவும், வட்டார / நகர / சர்க்கிள் தலைவர்களோடு இணைந்து கிராம / வார்டு கமிட்டிகளை கட்டமைக்கவும், மறுசீரமைக்கவும் ஏதுவாக 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரு சட்டமன்ற தொகுதி பொறுப்பாளரை நியமித்துள்ளோம். இவர்கள் அனைவரும் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்களின் வழிகாட்டுதலோடு மேற்கண்ட பணிகளை ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும். அதேபோல் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்களும், இப்பணிகள் முழுமையாக நடைபெற இக்குழுவினருக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
மாவட்ட காங்கிரஸ் தலைவர்களும், மாநில நிர்வாகிகளும், முன்னணி அமைப்புகளின் நிர்வாகிகளும், இயக்க முன்னணியினரும் இந்த மாபெரும் இயக்க சீரமைப்பு பணியினை வெற்றிகரமாக நடத்தித் தர வேண்டும் என்று அன்புடன் வேண்டுகிறேன். அடித்தளத்தில் இயக்கத்தை வலுப்படுத்துவதின் மூலமே நாம் விரும்பும் இலக்கினை அடைய முடியும்.
அடிப்படை கட்டமைப்பினை வலுப்படுத்தும் / மறுசீரமைக்கும் திட்டத்தின் துவக்க விழா காங்கிரஸ் பேரியக்கம் தொடங்கப்பட்ட நாளான டிசம்பர் 28 ஆம் நாள் சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் சென்னையில் நடைபெறும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
நடைபெறும் இந்த திட்டத்தின் துவக்க விழாவில் தமிழக பொறுப்பாளர்கள் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். எனவே, நடைபெறும் இந்த திட்டத்தின் துவக்கவிழா கூட்டத்தில் தவறாது கலந்து கொள்வதோடு மட்டுமல்லாமல் இந்த பெரும் முயற்சி முழு வெற்றி பெற தங்களது மேலான ஒத்துழைப்பினை வழங்கிட வேண்டும் என்று அன்புடன் அழைக்கிறேன்.
மத்திய ஒருங்கிணைப்புக் குழு அலுவலக பொறுப்பாளர்கள் :
திரு. சொர்ணா சேதுராமன், துணைத் தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி
திரு. கே. தணிகாசலம், பொதுச்செயலாளர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி
நாடாளுமன்ற தொகுதிநாடாளுமன்ற ஒருங்கிணைப்பாளர்
மண்டலம் : 1 ஒருங்கிணைப்பாளர் : டாக்டர் கே. விஜயன்
வடசென்னை வழக்கறிஞர் பி. தாமோதரன்
மத்தியசென்னை திருமதி. லட்சுமி ராமச்சந்திரன்
தென்சென்னை திருமதி. இமயா கக்கன்
மண்டலம் : 2 ஒருங்கிணைப்பாளர் : திரு. எஸ்.டி. நெடுஞ்செழியன்
திருவள்ளுர் (எஸ்.சி.) திரு. ஏ.ஜி. சிதம்பரம்
காஞ்சிபுரம் (எஸ்.சி.) திரு. டி.என். முருகானந்தம், Ex.MLA
ஸ்ரீபெரும்புதூர் திரு. தாம்பரம் நாராயணன்
மண்டலம் : 3 ஒருங்கிணைப்பாளர் : திரு. முகம்மது குலாம் மொய்தீன்
அரக்கோணம் திரு. எம். ஜோதி
வேலூர் திரு. ஜெ. விஜய் இளஞ்செழியன்
திருவண்ணாமலை திரு. சங்கராபுரம் சீனிவாசன்
மண்டலம் : 4 ஒருங்கிணைப்பாளர் : திரு. என். அருள்பெத்தையா
கிருஷ்ணகிரி திரு. பி.எஸ். விஜயகுமார், Ex.MLA
தருமபுரி திரு. அருள் அன்பரசு, Ex.MLA
சேலம் திரு. எஸ்.கே. செல்வராஜ்
மண்டலம் : 5, ஒருங்கிணைப்பாளர் திரு. கே.பி.எஸ்.எம். கனிவண்ணன்
ஆரணி திரு. ஆர். கிருஷ்ணதாஸ்
விழுப்புரம் (எஸ்.சி.) திரு. பி.வி. சிவக்குமார்
கள்ளக்குறிச்சி திரு. ஆர். இராம சுகந்தன்
மண்டலம் : 6, ஒருங்கிணைப்பாளர் திரு. வி.ஆர். சிவராமன்
நாமக்கல் திரு. எம்.ஆர். சுந்தரம், Ex.MLA
ஈரோடு திரு. பி.என். நல்லுசாமி
திருப்பூர் எஞ்சினியர் திரு. ஆர். இராதாகிருஷ்ணன்
மண்டலம் : 7, ஒருங்கிணைப்பாளர் திரு. டி. செல்வம்
நீலகிரி (எஸ்.சி.) திரு. பி.எஸ். சரவணகுமார்
கோயம்புத்தூர் திரு. எல். முத்துக்குமார்
பொள்ளாச்சி டாக்டர் அழகு ஜெயபாலன்
மண்டலம் : 8, ஒருங்கிணைப்பாளர் திரு. ஆர்.எம். பழனிச்சாமி
கரூர் திரு. கே. செந்தில்குமார்
திண்டுக்கல் திரு. பேங்க் கே. சுப்பிரமணியன்
தேனி திரு. கே. செல்வராஜ் பாண்டியன்
மண்டலம் : 9, ஒருங்கிணைப்பாளர் திரு. ஏ. சந்திரசேகர்
பெரம்பலூர் திரு. எம். லெனின் பிரசாத்
கடலூர் டாக்டர் கே.ஐ. மணிரத்தினம்
சிதம்பரம் (எஸ்.சி.) திரு. ஆர். ரங்கபூபதி
மண்டலம் : 10, ஒருங்கிணைப்பாளர் திரு. டி.என். அசோகன்
மயிலாடுதுறை திரு. ஜி. ராஜேந்திரன்
நாகப்பட்டினம் (எஸ்.சி.) திரு. கே. மகேந்திரன்
தஞ்சாவூர் வழக்கறிஞர் ஆர். ராஜ்மோகன்
மண்டலம் : 11, ஒருங்கிணைப்பாளர் திரு. டி. பென்னட் அந்தோணிராஜ்
சிவகங்கை திரு. எம்.என். கந்தசாமி, Ex.MLA
மதுரை திரு. சி.ஆர். சுந்தர்ராஜன்
திருச்சிராப்பள்ளி திரு. எம். தெய்வேந்திரன்
மண்டலம் : 12, ஒருங்கிணைப்பாளர் திரு. எஸ்.எஸ். ராமசுப்பு, Ex.MP
தூத்துக்குடி வழக்கறிஞர் மகேந்திரன்
விருதுநகர் திரு. ஆஸ்கர் பிரெடி
இராமநாதபுரம் திரு. எஸ்.எம். இதாயத்துல்லா
மண்டலம் : 13, ஒருங்கிணைப்பாளர் திரு. ஏ.பி.சி.வி. சண்முகம்
தென்காசி (எஸ்.சி.) திரு. ஐ. சிலுவை
திருநெல்வேலி ஆலங்குளம் திரு. எஸ். செல்வராஜ்
கன்னியாகுமரி திரு. எஸ்.கே.டி.பி. காமராஜ்
தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ