தமிழ் செய்தி வாசிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக பொறுப்பேற்றுள்ள திரு. பிரபுதாசன், துணைத் தலைவர்களாக பொறுப்பேற்றுள்ள திரு. மோகன்ராஜ், திருமதி. ஜெயஸ்ரீ சுந்தர் உள்ளிட்ட நிர்வாகிகளை மனதார வாழ்த்துகிறேன், பாராட்டுகிறேன். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

13 Sep 2021

தமிழகத்தின் அனைத்து தொலைக்காட்சிகளிலும் பணியாற்றும் செய்தி வாசிப்பாளர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு வரும் தமிழ் செய்தி வாசிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் நீதிபதி ஜே. ஜெயந்தி அவர்கள் முன்னிலையில் பதவி ஏற்றுக் கொண்டுள்ளனர். இவர்களில் சங்கத்தின் தலைவராக பொறுப்பேற்றுள்ள திரு. பிரபுதாசன், துணைத் தலைவர்களாக பொறுப்பேற்றுள்ள திரு. மோகன்ராஜ், திருமதி. ஜெயஸ்ரீ சுந்தர் உள்ளிட்ட நிர்வாகிகளை மனதார வாழ்த்துகிறேன், பாராட்டுகிறேன்.

மற்ற மொழி தொலைக்காட்சிகளை விட பன்மடங்கு அனைவருக்கும் புரியும் வகையில் நவீனத் தன்மையோடு செய்தி வாசிப்பதில் தமிழக தொலைக்காட்சிகள் முன்னோடியாக விளங்கி வருகின்றன. இந்த பெரும் மாற்றத்தை தொடக்கி வைத்த பெருமை தமிழக தொலைக்காட்சிகளுக்கு உண்டு. அந்த வகையில் அனைத்து மக்களையும் கவருகின்ற வகையில் செய்தி வாசிப்பவர்கள் இணைந்து சங்கம் அமைத்து தேர்தலை நடத்தி முடிவுகளை ஜனநாயக முறையில் அறிவித்திருப்பது மிகுந்த வரவேற்புக்குரியது. இவர்களது பணி மேலும் சிறப்பாக அமைந்திட வாழ்த்துகிறேன்.

கே.எஸ். அழகிரி