தமிழ் கூறும் நல்லுலகம் போற்றும், ‘சூப்பர் ஸ்டார்’ என்று அழைக்கப்படுகிற திரு. ரஜினிகாந்த் அவர்களுக்கு திரைப்படத்துறையில் மிக உயர்ந்த தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. – தலைவர் திரு கே எஸ் அழகிரி

25 OCT 2021 –

தமிழ் கூறும் நல்லுலகம் போற்றும், ‘சூப்பர் ஸ்டார்’ என்று அழைக்கப்படுகிற திரு. ரஜினிகாந்த் அவர்களுக்கு திரைப்படத்துறையில் மிக உயர்ந்த தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.
திரைப்படத்துறையில் எத்தனையோ நடிகர்கள் இருந்தாலும், திரு. ரஜினிகாந்த் அவர்களின் நடிப்பு பாணியை பின்பற்றியவர்கள் முன்னொருவரில்லை, பின்னொருவரில்லை என்று கூறுகிற அளவிற்கு தனித்துவமிக்கவராக விளங்கி வருகிறார். ஒரு திரைப்படத்தின் வெற்றி என்பது பெரும்பாலும் வசூலைப் பொருத்தே அமைகிறது. அந்த வகையில் திரு. ரஜினிகாந்த் அவர்கள் திரைப்படங்களின் மூலம் தாம் ஒரு வசூல் சக்கரவர்த்தி என்பதை தொடர்ந்து நிருபித்து வருகிறார்.
துவக்க விழாவிலேயே அவரது படங்கள் விற்பனையாகிவிடும். அந்தளவிற்கு கலைத்துறையில் தனித்தன்மையோடு, லட்சக்கணக்கான ரசிகர்களின் பேராதரவோடு நடிப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிற திரு. ரஜினிகாந்த் அவர்களுக்கு தாதாசாகேப் பால்கே விருது வழங்கியிருப்பது மிகவும் பொருத்தமானதாகும். தகுதியானவருக்கே இவ்விருது வழங்கப்பட்டிருக்கிறது. இதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக மனதார வரவேற்கிறேன், பாராட்டுகிறேன்.

– கே.எஸ். அழகிரி