அறிக்கை |27 April 2022
தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் நடைபெற்ற தேர் திருவிழாவில், தேரின் மேற்பகுதி உயர் மின் அழுத்தக் கம்பியில் உரசியதால் ஏற்பட்ட விபத்தில் 3 சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்த சம்பவம் அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்.
ஆண்டுதோறும் சித்திரை மாதம் வெகு விமரிசையாக இத்தேர் திருவிழா நடைபெறும். இந்த சித்திரைத் திருவிழாவின் போது இச்சோக நிகழ்வு நடைபெற்றுள்ளது. இத்தகைய நேரங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காதது மிகுந்த வருத்தத்தை தருகிறது.
தேர் திருவிழாவில் மின் கசிவினால் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த அனைவருக்கும் தலா ரூபாய் 10 லட்சம் நஷ்டஈடு வழங்குவதோடு, விபத்தில் காயமடைந்த அனைவருக்கும் உரிய சிகிச்சையும், தகுந்த நிவாரணமும் அளிக்க வேண்டுமென்று தமிழக அரசை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
திரு கே.எஸ். அழகிரி