28-Jan-2025
அறிக்கை
நீலகிரி மாவட்டம், கூடலூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தேவர்சோலை பேரூராட்சி இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்த திரு. ஜம்ஷிர் அவர்கள் யானை தாக்கி இறந்ததாக கடந்த 25 ஆம் தேதி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு தகவல் அளிக்கப்பட்டது. உடற்கூறு ஆய்விற்குப் பின்னர் அவர் யானை தாக்கி பலியாகவில்லை என்றும், அவரது மரணம் கொலையாக இருக்கலாம் என்றும் தற்போது தெரிய வந்துள்ளது.
பலியான திரு. ஜம்ஷிர் அவர்கள் இளைஞர் காங்கிரசில் பேரூராட்சித் தலைவராக துடிப்புடன் செயலாற்றியவர். அவரது மரணத்தின் உண்மை தன்மையை கண்டறிய முறையான மற்றும் விரைவான விசாரணையை மேற்கொண்டு உண்மைக் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி உச்சபட்ச தண்டனையை பெற்றுத் தருமாறு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை கேட்டுக் கொள்கிறேன்.
தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ