வருகிற அக்டோபர் 2 ஆம் தேதி தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 155 வது பிறந்தநாள், பெருந்தலைவர் காமராஜரின் நினைவுநாள், திரு. லால்பகதூர் சாஸ்திரி அவர்களின் பிறந்தநாள் என்ற முப்பெரும் நிகழ்வுகளை முன்னிட்டு காந்திய சிந்தனை, மதநல்லிணக்கம், வெறுப்பு அரசியலுக்கு எதிரான பரப்புரை, மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி அவர்களுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. பரப்பி வருகிற கோயபல்ஸ் பிரச்சாரத்தை முறியடிக்கிற வகையில் தேசிய விழிப்புணர்வு நடைபயணம் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற வேண்டுமென அகில இந்திய காங்கிரஸ் வலியுறுத்துகிறது. இதன்படி தமிழகத்தில் அக்டோபர் 2 ஆம் தேதி தொடங்கி 9 ஆம் தேதி வரை மாவட்டத்தின் அனைத்து வட்டார, சர்க்கிள், நகர, பேரூர், கிராம அளவில் கையில் காங்கிரஸ் கொடியையும், பதாகைகளையும் தாங்கிக் கொண்டு மாபெரும் தேசிய அணிவகுப்பை காங்கிரஸ் கட்சியினர் நடத்த வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.- தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ

30-Sep-2024

அறிக்கை

உலகத்தின் மிகப்பெரிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து சத்தியம், அஹிம்சை என்ற தத்துவங்களின் அடிப்படையில் சத்தியாகிரகம், ஒத்துழையாமை என்கிற போராட்ட திட்டங்களை கடைபிடித்து, 200 ஆண்டுகால அடிமை விலங்கை உடைத்தெறிந்து இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்றுத் தந்த பெருமை மகாத்மா காந்தி அவர்களுக்கு உண்டு. இந்திய சுதந்திரத்திற்காக 1915 ஆம் ஆண்டு முதல் 1947 வரை 32 ஆண்டுகள் போராடியிருக்கிறார். 1947 ஆகஸ்ட் 15 இல் நாடு விடுதலையடைந்த போது, தில்லியில் நடைபெற்ற கோலாகலமான விழாவில் பங்கேற்காமல் வங்காளத்தில் மதக் கலவரம் ஏற்பட்ட பகுதிகளில் அதை அடக்குவதற்கு காலில் செருப்பு கூட அணியாமல் கிராமம், கிராமமாக இருநூறுக்கும் மேற்பட்ட மைல்கள் நடந்து சென்று மதநல்லிணக்கத்தை ஏற்படுத்தினார். இந்திய விடுதலையின் கடைசி காலக்கட்டத்தில் வகுப்புவாத ஆர்.எஸ்.எஸ். பரப்பிய நச்சு கருத்துகளால் ஈர்க்கப்பட்ட நாதுராம் கோட்சே, தேசத்தந்தை மகாத்மா காந்தியை படுகொலை செய்தார். அன்றிலிருந்து இன்றுவரை இந்தியாவில் இரு வேறு சித்தாந்தங்கள் இருந்து வருகின்றன. அதில் ஒன்று காந்தியடிகள் பரப்பிய மதநல்லிணக்கம். மற்றொன்று ஆர்.எஸ்.எஸ். பரப்பி, பா.ஜ.க. நடைமுறைப்படுத்துகிற வகுப்புவாத சித்தாந்தம்.
இந்நிலையில், வருகிற அக்டோபர் 2 ஆம் தேதி தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 155 வது பிறந்தநாள், பெருந்தலைவர் காமராஜரின் நினைவுநாள், திரு. லால்பகதூர் சாஸ்திரி அவர்களின் பிறந்தநாள் என்ற முப்பெரும் நிகழ்வுகளை முன்னிட்டு காந்திய சிந்தனை, மதநல்லிணக்கம், வெறுப்பு அரசியலுக்கு எதிரான பரப்புரை, மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி அவர்களுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. பரப்பி வருகிற கோயபல்ஸ் பிரச்சாரத்தை முறியடிக்கிற வகையில் தேசிய விழிப்புணர்வு நடைபயணம் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற வேண்டுமென அகில இந்திய காங்கிரஸ் வலியுறுத்துகிறது. இதன்படி தமிழகத்தில் அக்டோபர் 2 ஆம் தேதி தொடங்கி 9 ஆம் தேதி வரை மாவட்டத்தின் அனைத்து வட்டார, சர்க்கிள், நகர, பேரூர், கிராம அளவில் கையில் காங்கிரஸ் கொடியையும், பதாகைகளையும் தாங்கிக் கொண்டு மாபெரும் தேசிய அணிவகுப்பை காங்கிரஸ் கட்சியினர் நடத்த வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இதைப் பார்க்கிற பொதுமக்கள், தமிழகத்தில் விடுதலைப் போராட்ட காலத்தில் நிலவிய தேசிய எழுச்சியின் மறுமலர்ச்சியாக பார்க்கிற வகையில் அக்டோபர் 2 ஆம் தேதி காங்கிரஸ் நண்பர்கள் அணி அணியாக திரண்டு வந்து தேசிய விழிப்புணர்வு நடைபயணத்தில் பெருந்திரளாக பங்கேற்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
இந்திய மக்களை பிளவுபடுத்துகிற அரசியலை ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. செய்து வருகிறது.  அதேநேரத்தில், மக்களை ஒற்றுமைப்படுத்துகிற அரசியலை தலைவர் ராகுல்காந்தி மேற்கொண்டு வருகிறார். இதை சகித்துக் கொள்ள முடியாத பா.ஜ.க.வினர் ஆதாரமற்ற அவதூறான செய்திகளை பரப்பி வருகின்றனர். தலைவர் ராகுல்காந்தி இடஒதுக்கீட்டுக்கு எதிரானவர் என்ற ஜமக்காளத்தில் வடிகட்டிய பொய்யை பா.ஜ.க.வினர் கூறி வருகின்றனர். அனைத்து மக்களையும் உள்ளடக்குகிற வகையில், சமூக நீதி அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதற்காக சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டுமென்று இந்தியாவில் முதல் குரல் கொடுத்த ஒப்பற்ற தலைவர் ராகுல்காந்தி என்பதை நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு காங்கிரஸ் கட்சிக்கு இருக்கிறது. உச்சநீதிமன்றம் இடஒதுக்கீட்டுக்கு விதித்த 50 சதவிகித வரம்பை தளர்த்த வேண்டுமென்று குரல் கொடுத்து வருபவரும் நமது தலைவர் தான்.
தேசிய விழிப்புணர்வு நடைபயணம் நிறைவு பெறுகிற இடத்தில் பா.ஜ.க.வின் அவதூறு பிரச்சாரத்தை முறியடிக்கிற வகையில் கண்டன உரைகளை நிகழ்த்தி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது தான் காந்தியடிகள் பிறந்தநாளான அக்டோபர் 2 இல் நாட்டு மக்களுக்கு காங்கிரஸ் கட்சியினர் சொல்கிற பெரும் செய்தியாக இருக்க வேண்டும். அதை செய்து முடிக்கிற வகையில், அக்டோபர் 2 அன்று நடைபயணத்தை மிகுந்த கட்டுப்பாட்டுடன்  அனைவரும் பாராட்டுகிற வகையில் அணிவகுப்பை ஒருங்கிணைத்திட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். தமிழகம் முழுவதும் நடைபெறுகிற தேசிய விழிப்புணர்வு நடைபயணத்தில் மாவட்ட வாரியாக  கீழ்க்கண்டவர்கள் பங்கேற்று சிறப்பிப்பார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
 1 திருவள்ளுர் வடக்கு திரு சசிகாந்த் செந்தில், எம்.பி.
திரு துரை சந்திரசேகர், எம்.எல்.ஏ.
திரு டி.எல். சதாசிவலிங்கம்
 2 திருவள்ளுர் தெற்கு டாக்டர் ஏ.செல்லக்குமார், Ex.MP
 3 ஆவடி மாநகர் திரு கீழானூர் ராஜேந்திரன்
 4 வடசென்னை கிழக்கு திரு உ.பலராமன், Ex.MLA
 5 வடசென்னை மேற்கு திருமதி. இமயா கக்கன்
 6 மத்தியசென்னை கிழக்கு திரு சொர்ணா சேதுராமன்
 7 மத்தியசென்னை மேற்கு டாக்டர் நாசே ஜெ. ராமச்சந்திரன்
 8 தென்சென்னை கிழக்கு திரு ஜே.எம்.எச். அசன் மௌலானா, எம்.எல்.ஏ.
 9 தென்சென்னை மத்தி டாக்டர் கே. விஜயன்
10 தென்சென்னை மேற்கு திருமதி கே.ராணி, Ex.MP
11 செங்கற்;பட்டு வடக்கு திரு சா. பீட்டர் அல்போன்ஸ், Ex.MP
12 செங்கற்பட்டு தெற்கு திரு அருள் அன்பரசு, Ex.MLA
13 காஞ்சிபுரம் திரு பெ. விஸ்வநாதன், Ex.MP
14 ராணிப்பேட்டை திரு ஏ.எம். முனிரத்தினம், எம்.எல்.ஏ.
15 வேலூர் மாநகர் திரு டி.என். முருகானந்தம், Ex.MLA
16 வேலூர் மத்தி திரு வாலாஜா ஜெ.அசன், Ex.MLA
17 திருப்பத்தூர் திரு சி.டி. மெய்யப்பன்
18 கிருஷ்ணகிரி கிழக்கு திரு கே. கோபிநாத், எம்.பி.
19 கிருஷ்ணகிரி மேற்கு திரு கே. கோபிநாத், எம்.பி.
                                      திரு கே.ஏ. மனோகரன், Ex.MLA
20 தருமபுரி திரு ஆர். ராம சுகந்தன்
21 திருவண்ணாமலை தெற்கு திரு. ஆர். ரங்கபூபதி
22 திருவண்ணாமலை வடக்கு திரு. பி.எஸ். விஜயகுமார், Ex.MLA
23 விழுப்புரம் வடக்கு திரு முகம்மது குலாம் மொய்தீன்
24 விழுப்புரம் மத்தி திரு. பாபு சத்தியமூர்த்தி
25 கள்ளக்குறிச்சி டாக்டர். கே.ஐ. மணிரத்தினம்
26 சேலம் கிழக்கு திரு. எம்.பி.எஸ். மணி
27 சேலம் மேற்கு திரு. எஸ்.என். காசிலிங்கம்
28 சேலம் மாநகர் திரு. கே.வீ. தங்கபாலு
29 நாமக்கல் கிழக்கு டாக்டர் ஆர். செழியன்
30 நாமக்கல் மேற்கு திரு. எம்.ஆர். சுந்தரம், Ex.MLA
31 ஈரோடு மாநகர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன், எம்.எல்.ஏ.
32 ஈரோடு தெற்கு திரு. ஆர்.எம். பழனிச்சாமி, Ex.MLA
33 ஈரோடு வடக்கு திரு. பேங்க் கே. சுப்பிரமணியம்
34 திருப்பூர் வடக்கு திரு. ப. கோபி
35 திருப்பூர் மாநகர் திரு. டி. கோவிந்தராஜ்
36 திருப்பூர் தெற்கு திரு. எல். முத்துக்குமார்
37 நீலகிரி திரு. ஆர். கணேஷ், எம்.எல்.ஏ.
38 கோயம்புத்தூர் வடக்கு திரு. எம். லெனின் பிரசாத்
39 கோயம்புத்தூர் மாநகர் திரு. மயூரா எஸ். ஜெயக்குமார்
40 கோயம்புத்தூர் தெற்கு திரு. எம்.என். கந்தசாமி, Ex.MLA
41 திண்டுக்கல் மேற்கு செல்வி. எஸ். ஜோதிமணி, எம்.பி.
                                      திரு. ஆர். சிவசக்திவேல் கவுண்டர்
42 திண்டுக்கல் கிழக்கு திரு. கே. செந்தில்குமார்
43 திண்டுக்கல் மாநகர் திரு. ப. செந்தமிழ் அரசு
44 கரூர் செல்வி. எஸ். ஜோதிமணி, எம்.பி.
45 திருச்சி தெற்கு செல்வி. எஸ். ஜோதிமணி, எம்.பி.
திருமதி. எஸ். சுஜாதா
46 திருச்சி மாநகர் திரு. சு. திருநாவுக்கரசர், Ex.MP
47 திருச்சி வடக்கு திரு. எம். கிறிஸ்டோபர் திலக்
48 பெரம்பலூர் திரு. திருச்சி வேலுச்சாமி
49 அரியலூர் திரு. ஜி. ராஜேந்திரன்
50 கடலூர் தெற்கு திரு. கே.எஸ். அழகிரி, Ex.MP
51 கடலூர் மத்தி டாக்டர் எம்.கே. விஷ்ணுபிரசாத், எம்.பி.,
52 கடலூர் மேற்கு டாக்டர் எம்.கே. விஷ்ணுபிரசாத், எம்.பி.,
திரு. ஆர். ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ.
53 மயிலாடுதுறை வழக்கறிஞர். சுதா ராமகிருஷ்ணன், எம்.பி.,
                               திரு. எஸ். ராஜகுமார், எம்.எல்.ஏ.,
54 நாகப்பட்டினம் திருமதி. சையத் ஹசீனா
55 திருவாரூர் திரு. பி.வி. ராஜேந்திரன், Ex.MP
56 தஞ்சாவூர் வடக்கு வழக்கறிஞர். சுதா ராமகிருஷ்ணன், எம்.பி.,
57 தஞ்சாவூர் மாநகர் திரு. எஸ். ராஜாதம்பி,
58 தஞ்சாவூர் தெற்கு திரு. ஆர். சிங்காரம், Ex.MLA
59 புதுக்கோட்டை வடக்கு செல்வி. எஸ். ஜோதிமணி, எம்.பி.
                                                திரு. டி. புஷ்பராஜ், Ex.MLA
60 புதுக்கோட்டை தெற்கு திரு. கார்த்தி ப. சிதம்பரம், எம்.பி.,
                   திரு. எஸ்.டி. இராமச்சந்திரன், எம்.எல்.ஏ.
61 சிவகங்கை திரு. கார்த்தி ப. சிதம்பரம், எம்.பி.,
திரு. எஸ். மாங்குடி, எம்.எல்.ஏ.
62 மதுரை வடக்கு திரு.கே.ஆர். ராமசாமி, Ex.MLA
63 மதுரை மாநகர் டாக்டர். இ.எம். சுதர்சன நாச்சியப்பன், Ex.MP
64 மதுரை தெற்கு திரு. ப. மாணிக்கம் தாகூர், எம்.பி.,
65 தேனி திரு. எம். ஜோதி
66 விருதுநகர் மேற்கு திரு. ப. மாணிக்கம் தாகூர், எம்.பி.,
67 விருதுநகர் கிழக்கு திரு. ப. மாணிக்கம் தாகூர், எம்.பி.,
திரு. ஏ.எம்.எஸ்.ஜி. அசோகன், எம்.எல்.ஏ.
8 ராமநாதபுரம் திரு. எஸ்.எம். இதாயத்துல்லா
திரு. ஆர்.எம். கருமாணிக்கம், எம்.எல்.ஏ.
69 தூத்துக்குடி வடக்கு திரு. ஏ.பி.சி.வி. சண்முகம்
70 தூத்துக்குடி மாநகர் திரு. ஆர். தனுஷ்கோடி ஆதித்தன், Ex.MP
71 தூத்துக்குடி தெற்கு திரு. ஊர்வசி. எஸ். அமிர்தராஜ், எம்.எல்.ஏ.
திரு. எம்.பி. சுடலையாண்டி, Ex.MLA
72 தென்காசி வழக்கறிஞர் சி. ராபர்ட் புரூஸ், எம்.பி.,
திரு. எஸ். பழனிநாடார், எம்.எல்.ஏ.
திரு. எஸ்.எஸ். இராமசுப்பு, Ex.MP
73 திருநெல்வேலி கிழக்கு வழக்கறிஞர் சி. ராபர்ட் புரூஸ், எம்.பி.,
டாக்டர் ரூபி ஆர். மனோகரன், எம்.எல்.ஏ.
74 திருநெல்வேலி மாநகர் வழக்கறிஞர் சி. ராபர்ட் புரூஸ், எம்.பி.,
75 கன்னியாகுமரி கிழக்கு திரு. விஜய் வசந்த், எம்.பி.,
                                                திரு. ஜே.ஜி. பிரின்ஸ், எம்.எல்.ஏ.
76 கன்னியாகுமரி மேற்கு திரு. விஜய் வசந்த், எம்.பி.,
                                                 திரு. எஸ். ராஜேஷ்குமார், எம்.எல்.ஏ.
                                                திருமதி. தாரகை கத்பர்ட், எம்.எல்.ஏ.
77 நாகர்கோவில் மாநகர் திரு. விஜய் வசந்த், எம்.பி.,

 

தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ