சென்னை சத்தியமூர்த்தி பவனில் செப்டம்பர் 2 ஆம் தேதி வியாழக்கிழமை முன்னாள் மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் டாக்டர் அஸ்வினி குமார் நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியது

சென்னை சத்தியமூர்த்தி பவனில் செப்டம்பர் 2 ஆம் தேதி வியாழக்கிழமை முன்னாள் மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் டாக்டர் அஸ்வினி குமார் நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியது :

தேசிய நலன் மற்றும் பொது நலன் காக்கும் பொறுப்பை மனதில் கொண்டு, கடந்த 67 ஆண்டுகளாக உருவாக்கப்பட்ட இந்தியாவின் ரூ.6 லட்சம் கோடி மதிப்பிலான தேசிய சொத்துகள், மோடி அரசின் ‘தேசிய பணமாக்கல் வழி கொள்கை’ மூலம் தனியாருக்கு விற்கப்படுவதை இந்திய தேசிய காங்கிரஸ் கண்டிக்கிறது.

2022 முதல் 2025 ஆம் ஆண்டு வரையிலான நான்கு வருட காலப்பகுதியில், பொருளாதாரத்தின் முக்கிய துறைகளை உள்ளடக்கிய தேசத்தின் அதிமுக்கிய மதிப்புள்ள சொத்துகளை விற்பதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்த அறிவிப்பின் மூலம், பொது நலன் மற்றும் அரசாங்கத்தின் நம்பகக் கடமைகளை மீறி, தங்களுக்கு நெருக்கமான சிலருக்கு பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துகளை சட்டப்பூர்வமாக்க மத்திய அரசு முயல்கிறது.

இந்த கொள்கை பல்வேறு நிலைகளிலும் நெருங்கிய முதலாளித்துவம் பொருளாதார பலன் அடைவதை குறிக்கோளாகக் கொண்டுள்ளது.

சுட்டிக்காட்டப்பட்ட வழிமுறைகள் மூலம் தேசத்தின் சொத்துகளை அவசர அவசரமாக விற்பனை செய்வது, பின்வரும் தேசிய நலன்களுக்கு எதிரானது:

1. பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் துறையினர் தங்கள் வசம் வைத்துக் கொள்ளும் கால அளவு 30 முதல் 50 ஆண்டுகள் அல்லது அதற்கும் மேற்பட்ட ஆண்டுகள். இதில், தனியாருக்கான லாபம் மற்றும் பயன்பாட்டு நோக்கங்களைச் சமநிலைப்படுத்துவதற்கான தெளிவான வழிகாட்டுதல் இல்லாததால், பொது உரிமைகள் நிரந்தரமாகப் பறிக்கப்படுகின்றன.

2. பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்கு விற்பனை செய்து ஒப்பந்தம் செய்துகொள்வதால், பொதுச் சேவைகளுக்கான மேல்நோக்கிய தாக்கத்துக்கு வழிவகுக்கும். இதனால் சாதாரண மக்களுக்குச் சுமை ஏற்படும்.

3. வரி செலுத்துவோரால் நிதியளிக்கப்பட்ட சொத்துகளை, ஒரு சில வணிகக் குழுக்களுக்கு மாற்றுவதே இந்த கொள்கையின் நோக்கமாகும்.

4. பொருளாதாரத்தின் முக்கிய துறைகளில், பொருளாதார சக்தியின் கவனத்தை அதிகரிக்க வழிவகுக்கும். இது விலை நிலைத்தன்மையைப் பாதிக்கும்.

5. இதனால் 30 முதல் 50 ஆண்டுகளுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படும். அதாவது, பொது நிறுவனங்களிடமிருந்து கிடைக்க வேண்டிய வருவாய், இழப்பாக மாறும்.

6. பொதுத் துறை நிறுவனங்களை வாங்கி தனியார் துறையினர் பயன்பெறுவதற்காக, அவர்களுக்கு நிதியுதவி செய்ய பொதுத்துறை வங்கிகள் கேட்டுக் கொள்ளப்படலாம்.

7. குத்தகை கால முடிவில் பொது நிறுவனங்களின் சொத்து மதிப்பு பூஜ்ஜியம் ஆகிவிடும். இவ்வாறு தனியாருக்குப் பயனளிக்கும் வகையில் பொது நிறுவனங்களின் சொத்துகளை தனியாருக்கு மாற்ற மோடி அரசு முயல்கிறது.

8. வேலை பாதுகாப்பின்மையை உருவாக்குவதோடு, எஸ்சி., எஸ்டி., ஓபிசி ஆகியோருக்கான இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கும் ‘தேசிய பணமாக்கல் வழி கொள்கை’ பாதிப்பை ஏற்படுத்தும்.

9. உள்கட்டமைப்புக்கான ரூ.100 லட்சம் கோடி முதலீட்டுக்காக, பொதுத்துறை நிறுவனங்களை விற்று அதிலிருந்து கிடைக்கும் ரூ. 6 லட்சம் கோடியை எப்படி செலவிட முடியும். இது நியாயமற்ற வாதம்.

10. ‘தேசிய பணமாக்கல் வழி கொள்கையின்’ கீழ் பொதுத்துறை நிறுவனங்களைக் கொண்டு வருவதற்கான எந்த அளவுகோலும் குறிப்பிடப்படவில்லை.

11. அதிகார மோசடியான ‘தேசிய பணமாக்கல் வழி கொள்கையை’ அறிவிப்பதற்கு முன்பு, பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்கங்களுடன் பயனுள்ள ஆலோசனைகளை மோடி அரசு நடத்தவில்லை.