03-Jan-2025
கடந்த 19.9.2024 அன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் எனது தலைமையில், அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் டாக்டர் அஜோய்குமார், செயலாளர் திரு. சூரஜ் எம்.என். ஹெக்டே ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற தமிழ்நாடு காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியை சிறப்பாக செயல்படுத்துவது குறித்தும், தமிழக காங்கிரஸ் கட்சியில் தற்போதுள்ள மாநில செயற்குழு, மாநில துணைத் தலைவர்கள், மாநில பொதுச் செயலாளர்கள், மாநில செயலாளர்கள் மற்றும் மாவட்டத் தலைவர்களை மாற்றியமைத்து புதிய நியமனம் சம்பந்தமாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் அடிப்படையில் நேற்று (03.01.2025) சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போது இதுகுறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் உதய்பூர் பிரகடனத்தின் அடிப்படையிலும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயற்குழுவின் வழிகாட்டுதலின்படியும் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் மாவட்ட காங்கிரஸ் தலைவர்களை புதிதாக தேர்வு செய்ய வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது.
அகில இந்திய காங்கிரஸ் உதய்பூர் தீர்மானத்தின் அடிப்படையில் வரும் காலத்தில் 50 சதவிகிதம் பொறுப்புகள் 50 வயதுக்குட்பட்ட இளைஞர்கள், பெண்கள், தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் மக்கள், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் உள்ளிட்ட அனைவரும் இடம் பெற வழிவகை செய்யப்பட வேண்டும்.
மேலும் 50 சதவிகித பொறுப்புகளில் காங்கிரஸ் கட்சியில் தொடர்ந்து கொள்கை வழிநின்று, பல்வேறு பொறுப்புகளில் சிறப்பாக பணியாற்றுகின்ற சகோதர, சகோதரிகள் இடம் பெறுவது அவசியம்.
இதன்படி கீழ்க்கண்ட நியமனங்கள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
1. மாநில செயற்குழு உறுப்பினர்கள்
2. மாநில துணைத் தலைவர்கள்
3. மாநில பொதுச்செயலாளர்கள்
4. மாநில செயலாளர்கள்
5. மாவட்டத் தலைவர்கள்
மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான காங்கிரஸ் கட்சி சகோதர, சகோதரிகள் இக்கடிதத்துடன் இணைக்கப்பட்டுள்ள Google Form படிவத்தை முறையாக பூர்த்தி செய்து வருகிற ஜனவரி 18 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தேர்வு செய்துள்ள பதவிகளுக்கான நன்கொடையை விருப்பமுள்ளவர்கள் அளிக்கலாம்.
நன்கொடை வழங்க விரும்பும் கட்சியினர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பொறுப்புக்கு நன்கொடையாக ரூ.5,000/- (ரூபாய் ஐந்தாயிரம் மட்டும்), அதேபோல் மாநில நிர்வாகப் பொறுப்புக்கு நன்கொடையாக ரூ.1,000/- (ரூபாய் ஆயிரம் மட்டும்) Tamilnadu Congress Committee என்ற பெயரில் வரைவோலையாகவோ அல்லது கீழ் கொடுக்கப்பட்டுள்ள சென்னை, கனரா வங்கி கணக்கிற்கு RTGS மூலமாகவோ செலுத்திடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
TNCC Donation Account Detail:
Account Name : Tamilnadu Congress Committee
Account Number: 0908101052264
Canara Bank, GP Road Branch
IFSC Code : CNRB0000908
குறிப்பு: விண்ணப்பிப்பவர்கள் RTGS செய்ததற்கான ரசீதின் நகல் / வரைவோலையின் நகலை Google Form லிங்கில் தவறாமல் இணைக்க வேண்டும். வரைவோலை மூலமாக நன்கொடை செலுத்துபவர்கள் அசல் வரைவோலையை (Original DD) தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு தபால் மூலமாக அனுப்பிவைக்க வேண்டும்.
தபால் முகவரி:
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி
சத்தியமூர்த்தி பவன்,
40, திரு வி க சாலை
சென்னை – 600002
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் அதிகாரபூர்வமான இணையதளமான www.inctamilnadu.in
மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.
தங்கள் அன்புள்ள
(கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ.,)
Google Form: https://forms.gle/Dzp8NsFqVLm83dU96