வகுப்புவாத வெறுப்பை ஊக்குவிக்கும் பொய்களை பரப்பும் தொலைக்காட்சிகள், இணையதளங்களை கண்டுகொள்ளாத ஒன்றிய பா.ஜ.க. அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தேசிய ஒற்றுமையை காக்க போராடிவரும் மூத்த பத்திரிகையாளரான திரு சித்தார்த் வரதராஜன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவரும் ‘தி வயர்’ இணையதள இதழை முடக்கியிருப்பது பத்திரிக்கை சுதந்திரத்தின் மீது விழுந்த பேரடியாகும்.

09-May-2025

அறிக்கை

வகுப்புவாத வெறுப்பை ஊக்குவிக்கும் பொய்களை பரப்பும் தொலைக்காட்சிகள், இணையதளங்களை கண்டுகொள்ளாத ஒன்றிய பா.ஜ.க. அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தேசிய ஒற்றுமையை காக்க போராடிவரும் மூத்த பத்திரிகையாளரான திரு சித்தார்த் வரதராஜன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவரும் ‘தி வயர்’ இணையதள இதழை முடக்கியிருப்பது பத்திரிக்கை சுதந்திரத்தின் மீது விழுந்த பேரடியாகும். இதன்மூலம் ‘தி வயர்’ செய்தி ஊடகத்தின் குரல்வளையை நெரிக்கும் நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறேன். 10 ஆண்டுகளுக்கு மேலாக நாட்டில் நடைபெறுகிற மக்கள் விரோத ஆட்சியை எதிர்த்து, உண்மைகளை துல்லியமாக ஆய்வு செய்து மக்களுக்கு வழங்குகிற மகத்தான ஊடகப் பணியை செய்து வருகிற தி வயர் செய்தி நிறுவனம் மோடி அரசின் அடக்குமுறையை எதிர்த்து நீதிமன்றத்தின் மூலமாக நீதியை நிலைநாட்டும் என்று நம்புகிறேன். தி வயர் இணைய இதழின் ஜனநாயக உரிமைகளை காக்க மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் அனைத்தும் ஓரணியில் திரண்டு போராடுவது காலத்தின் கட்டாயமாகும்.

தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ