எதிர்காலத்தில் ஜல்லிக்கட்டு போட்டி சட்ட அனுமதியோடு தமிழர்களின் வீர விளையாட்டாக தொடர்ந்து நடைபெறுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டிருப்பதையும், இதற்கான சட்டப் போராட்டத்தை நடத்திய தமிழக அரசையும் பாராட்டுகிறேன். உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறேன். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

அறிக்கை 18-May-2023

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுப் போட்டியான ஜல்லிக்கட்டை நடத்துவதற்கு உச்சநீதிமன்றம் 2014 இல் தடை விதித்தது. அந்த தடையை நீக்குவதற்கு நடைபெற்ற சட்டப் போராட்டத்திற்கு இன்று உச்சநீதிமன்றம் நீதி வழங்கியிருக்கிறது. தமிழர்களின் நூற்றாண்டு கால பாரம்பரிய பண்பாட்டு விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கு தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய சட்டத்தை ஏற்றுக் கொண்டு இந்த தீர்ப்பை வழங்கியிருக்கிறது.
இந்தத் தீர்ப்பின் மூலம், எதிர்காலத்தில் ஜல்லிக்கட்டு போட்டி சட்ட அனுமதியோடு தமிழர்களின் வீர விளையாட்டாக தொடர்ந்து நடைபெறுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டிருப்பதையும், இதற்கான சட்டப் போராட்டத்தை நடத்திய தமிழக அரசையும் பாராட்டுகிறேன். உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறேன்.

தலைவர் திரு கே எஸ் அழகிரி