தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்து வைக்கம் போராட்டத்தில் பங்கெடுத்துக் கொண்ட தந்தை பெரியார் பிறந்த ஈரோட்டில் கேரள மாநில காங்கிரஸ் சார்பாக வருகிற மார்ச் 28 ஆம் தேதி காலை 10 மணிக்கு நினைவு பேரணி நடத்துவதென முடிவு செய்யப்பட்டுள்ளது. – தலைவர் திரு கே எஸ் அழகிரி

அறிக்கை 21-Mar-2023

தந்தை பெரியார் பங்கெடுத்து வெற்றி கண்ட வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவை ஓராண்டு முழுவதும் வருகிற மார்ச் 30 ஆம் தேதி தொடங்கி நடத்துவதென கேரள மாநில காங்கிரஸ் கமிட்டி முடிவு செய்திருக்கிறது. மார்ச் 30 அன்று நடைபெறுகிற தொடக்க விழாவில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் திரு. மல்லிகார்ஜுன் கார்கே அவர்கள் பங்கெடுத்து சிறப்பிக்க இருக்கிறார். இதையொட்டி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்து வைக்கம் போராட்டத்தில்  பங்கெடுத்துக் கொண்ட தந்தை பெரியார் பிறந்த ஈரோட்டில் கேரள மாநில காங்கிரஸ் சார்பாக வருகிற மார்ச் 28 ஆம் தேதி காலை 10 மணிக்கு நினைவு பேரணி நடத்துவதென முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்பேரணியை நான் கொடியசைத்து தொடக்கி வைப்பதோடு, சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினரும், தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவருமான திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் இப்பேரணிக்கு தலைமை வகித்து சிறப்பிக்க இருக்கிறார்.

ஈரோட்டில் தொடங்குகிற இந்நினைவுப் பேரணி மார்ச் 29 ஆம் தேதி பாலக்காடு வழியாக அன்று மாலை வைக்கம் சென்றடைகிறது. இந்த நினைவுப் பேரணி செல்லுகிற இடங்களில் எல்லாம் உற்சாகமான வரவேற்பு வழங்கவும், பேரணியில் பங்கு கொள்கிறவர்கள் தங்குவது உட்பட அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பதற்கு திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் தலைமையில் விழாக்குழு அமைக்கப்பட்டிருக்கிறது. இக்குழுவில் உள்ளவர்கள் அனைவரும் வைக்கம் போராட்ட நூற்றாண்டு நினைவுப் பேரணி மகத்தான வெற்றி பெற அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்படி காங்கிரஸ் நண்பர்களை அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

விழாக்குழு தலைவர்         :                      திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன், எம்.எல்.ஏ.,

ஒருங்கிணைப்பாளர்            :                    திரு. மோகன் குமாரமங்கலம்

உறுப்பினர்கள்                          :                 திரு. மயூரா எஸ். ஜெயக்குமார்

திரு. ஆர். கணேஷ், எம்.எல்.ஏ.,

திரு. டி. திருச்செல்வம்

திரு. மக்கள் ஜி. ராஜன்

திரு. எஸ்.வி. சரவணன்

திரு. ஈ.பி. ரவி

திரு. என்.கே. பகவதி

திரு. வி.எம்.சி. மனோகரன்

திரு. கே. கருப்பசாமி

திரு. ஆர். கிருஷ்ணன்

திரு. கே. தென்னரசு

திரு. ப. கோபி

திரு. ஏ.பி. பாஸ்கர்

திரு. எஸ்.கே. அர்த்தநாரி

திரு. சி.எஸ். ஜெயக்குமார்

திரு. பி.ஏ. சித்திக்

திரு. பி. செல்வகுமார்

திரு. பழையூர் கே. செல்வராஜ்

திரு. ஆர்.எம். பழனிச்சாமி

திரு. எம்.என். கந்தசாமி

திரு. வி.எஸ். காளிமுத்து

டாக்டர் அழகு ஜெயபால்

திரு. டி. கோவிந்தராஜூலு

திரு. பி.எஸ். சரவணக்குமார்

திரு. கே. செந்தில்குமார்

திரு. எல். முத்துக்குமார்

திரு. எஸ். பச்சமுத்து

திரு. கணபதி சிவக்குமார்

திரு. கே.எஸ். மகேஷ்குமார்

திரு. கே.பி. முத்துக்குமார்

திரு. வே. முத்துராமலிங்கம்

திருமதி. சித்ரா விஸ்வநாதன்

திருமதி. வி. காயத்ரி

திரு. ஆர். சிவக்குமார்

திரு. டி.டி.கே. சித்திக்

திரு. டி. செல்வகுமார்

திருமதி. பிரியா நாஷ்மிகர்

திருமதி. சாரதா தேவி

திரு. பி. ராஜேஷ், எம்.சி.,

திரு. ஆர். விஜயபாஸ்கர், எம்.சி.,

திருமதி. மங்கேஸ்வரி புனிதன், எம்.சி.,

திருமதி. ஜெ. சபுராமா ஜாபர் சாதிக், எம்.சி.,

திரு. எல்.பி. பாலசுப்பிரமணி

 

கே.எஸ். அழகிரி