அறிவிப்பு September 2022
இராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. செல்லத்துரை அப்துல்லா அவர்களின் ராஜினாமா கடிதம் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. அவருக்கு பதிலாக கீழ்க்கண்ட பொறுப்புக்குழு நியமிக்கப்படுகிறது. அக்குழுவின் தலைவராக சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் திரு. மலேசியா பாண்டியன் செயல்படுவார். உறுப்பினர்களாக திரு. ஜே.இ.எஸ். ரமேஷ்பாபு, திரு. ராஜாராம் பாண்டியன், திரு. எம். தெய்வேந்திரன், திரு. கோட்டை முத்து ஆகியோர் செயல்படுவார்கள்.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியால் அங்கீகரிக்கப்பட்டு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியால் அறிவிக்கப்பட்ட மாநில பொதுக்குழு உறுப்பினர் பட்டியல் தான் அங்கீகரிக்கப்பட்டது. மற்றவர்கள் அறிவித்த பட்டியல் அங்கீகரிக்கப்படாதது மற்றும் செல்லாதது ஆகும்.
கே.எஸ். அழகிரி