“வருகிற ஆகஸ்ட் 25 ஆம் தேதி உலகெங்கிலும் திரையிடப்பட இருக்கிற கக்கன் திரைப்படத்திற்கு வரி விலக்கு அளித்து ஆணை பிறப்பித்துள்ள தமிழக முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ” – தலைவர் திரு கே எஸ் அழகிரி

அறிக்கை 24-August-2023

சுதந்திரப் போராட்ட தியாகியும், தமிழக முன்னாள் அமைச்சருமான திரு பி. கக்கன் அவர்களது வாழ்க்கை வரலாற்றை இளைய சமுதாயத்தினர் அறிந்துகொள்கிற வகையில் சங்கர் மூவீஸ் சார்பாக மேட்டுப்பாளையம் திரு ஜோசப்பேபி அவர்கள் தயாரித்து நடித்துள்ளார். வருகிற ஆகஸ்ட் 25 ஆம் தேதி உலகெங்கிலும் திரையிடப்பட இ

ருக்கிற கக்கன் திரைப்படத்திற்கு வரி விலக்கு அளித்து ஆணை பிறப்பித்துள்ள தமிழக முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

உள்ளாட்சி அமைப்பின் கேளிக்கை வரி சட்டப்படி தமிழக அரசு வரிவிலக்கு அளித்திருப்பதை பயன்படுத்திக்கொள்ளுகிற வகையில், பெருந்திரளான தமிழக மக்கள் கக்கன் திரைப்படம் வெற்றிகரமாக அமைவதற்கு ஆதரவு தெரிவிக்கவேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

– தலைவர் திரு கே எஸ் அழகிரி