தியாகத்திலே பிறந்து, தியாகம் செய்வதற்காகவே அர்ப்பணித்துக் கொண்டிருக்கிற, மத கோட்பாடுகளைப் போற்றி பாதுகாக்கிற வகையில் வாழ்ந்து வருகிற இஸ்லாமிய சகோதரர்களுக்கு எனது நெஞ்சார்ந்த பக்ரீத் வாழ்த்துக்களை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.

பக்ரீத் வாழ்த்துச் செய்தி

உலகோர் அனைவரும் ஒரே தாய், தந்தை வழிவந்தவர்கள் என்ற நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய உண்மையை உணர்ந்து சகோதரத்துவம், சமாதானம், ஏகத்துவம் போன்றவற்றை பின்பற்றி மகிழ்ச்சியுடன் வாழ முற்படுவதே மனித இனத்தின் குறிக்கோளாகும். இஸ்லாமியர்கள் தியாகத் திருநாளாக கொண்டாடுகிற பக்ரீத் பண்டிகை, தியாகத்தை போற்றுகிற நாளாகும்.

ஒன்றிய பா.ஜ.க. அரசு இந்துத்வா கோட்பாடுகளை பின்பற்றி, அனைத்து நிலைகளிலும் புகுத்துவதன் மூலம் 20 கோடி சிறுபான்மை மக்களுக்கு எதிரான மிகப்பெரிய அச்சுறுத்தல்கள் நடைபெற்று வருகிறது. கடந்த 45 நாட்களாக மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியின, சிறுபான்மையின மக்கள் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். மணிப்பூர் தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. அங்குள்ள குடிமக்களுக்கு பாதுகாப்பில்லை. இதுகுறித்து பிரதமர் மோடி இதுவரை ஒரு வார்த்தை கூட தெரிவிக்கவில்லை. சிறுபான்மையின மக்கள் பாதுகாப்பற்ற சூழலில் வாழ்ந்து வருகிறார்கள். இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள சம உரிமை, சம வாய்ப்பு மற்றும் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகிறது. வெறுப்பு பேச்சின் மூலம் வகுப்புவாத அரசியல் நடத்தப்பட்டு வருகிறது. மதரீதியில் மக்கள் பிளவுபடுத்தப்பட்டு வருகிறார்கள். அனைவரையும் சமமாக நடத்துவதே மக்களாட்சியின் தத்துவமாகும். அந்த முயற்சிகள் வெற்றி பெற மதச்சார்பற்ற சக்திகள் ஓரணியில் திரள வேண்டும்.

தியாகத்திலே பிறந்து, தியாகம் செய்வதற்காகவே அர்ப்பணித்துக் கொண்டிருக்கிற, மத கோட்பாடுகளைப் போற்றி பாதுகாக்கிற வகையில் வாழ்ந்து வருகிற இஸ்லாமிய சகோதரர்களுக்கு எனது நெஞ்சார்ந்த பக்ரீத் வாழ்த்துக்களை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.

தலைவர் திரு கே.எஸ். அழகிரி