மகாவீரர் ஜெயந்தி வாழ்த்துச்செய்தி
சமண சமயத்தை போதித்த மகாவீரர் பீகாரில் ஒரு அரச குடும்பத்தில் கி.மு. 599-இல் பிறந்த மகான். இவரது பிறந்தநாள் மகாவீரர் ஜெயந்தியாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. பகவான் மகாவீரர் அவர்கள் தனது இளம் வயதிலேயே சுக வாழ்க்கையைத் துறந்து, இயற்கையோடு தனது வாழ்க்கை நெறிமுறைகளை இணைத்து, அகிம்சை, வாய்மையைப் பின்பற்றி, ஆசைகளைக் களைந்து, எதிலும் நிலையா நிலையினைக் கடைபிடித்து வாழ்ந்தவர்.
அவரது வாழ்க்கையே அவரது போதனைகளுக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் அளவுக்கு அறநெறியினையும் ஆன்மிக நெறியினையும் தவறாது பின்பற்றியவர். அராஜக ஆட்சி நடத்தும் பா.ஜ.க.வினரால் நாட்டில் நிலவும் அன்பற்ற நிலையும், வெறுப்பு மனப்பான்மையும் நீங்கிட அன்னாரின் போதனைகள் நமக்கு தற்போது மிகவும் அவசியமாகிறது.
மக்கள் அனைவரும் அன்னாரின் உயரிய கொள்கைகளைப் பின்பற்றி, அனைத்து ஜீவன்களிடமும் அன்பு செலுத்தி, அமைதியான வாழ்வினையே நாடிட முற்பட வேண்டும். பகவான் மகாவீரரின் பிறந்த நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அனைவருக்கும் மகாவீரர் ஜெயந்தி நல்வாழ்த்துகளை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
கே எஸ் அழகிரி