இந்தியாவின் சிறந்த குடிமக்களை உருவாக்கும் ஆசிரியர்கள் அனைவருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

அறிக்கை 04-Sep-2023

ஆசிரியர் தின வாழ்த்துச் செய்தி

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களது பிறந்தநாள் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அவர் ஒரு ஆசிரியராக இருந்து துணை குடியரசுத் தலைவராகவும், பிறகு குடியரசுத் தலைவராகவும் உயர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர்கள் தான் சிறந்த குடிமக்களை வகுப்பறையில் உருவாக்குகிறார்கள். பல மாணவர்கள் நல்ல ஆசிரியர்களிடம் பயின்ற காரணத்தால் பல்வேறு நிலைகளில் உயர்ந்து சாதனைகளைப் படைத்துள்ளனர். அதற்கு உந்து சக்தியாக இருப்பவர்கள் ஆசிரியர்கள். அந்த வகையில் ஆசிரியர்களை போற்றுகிற வகையிலும், அவர்களது பங்கை அங்கீகரிக்கும் வகையிலும் செப்டம்பர் 5 ஆம் நாளை ஆசிரியர் தினமாக கொண்டாடுவது மிகவும் பொறுத்தமானதாகும்.

எனவே, இந்தியாவின் சிறந்த குடிமக்களை உருவாக்கும் ஆசிரியர்கள் அனைவருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

தலைவர் திரு கே எஸ் அழகிரி