இலங்கை தமிழர்களின் துயரை போக்கிடும் வகையில் தமிழ்நாடு நாடாளுமன்ற, சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் தங்களது ஒருமாத ஊதியத்தை நிதியுதவி அளிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். – தலைவர் திரு கே.எஸ். அழகிரி

அறிக்கை | 05 May 2022

இலங்கை அரசுகளின் தவறான பொருளாதாரக் கொள்கைகளின் காரணமாக, அங்கு வாழ்கிற இலங்கைத் தமிழர்கள் உள்ளிட்ட மக்கள் கடும் துன்பத்திற்கு ஆளாகி வருகிறார்கள். அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறையால் அவர்களுடைய வாழ்வாதாரமே முற்றிலும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இலங்கையில் வாழும் மக்களின் இன்னலைப் போக்கிடும் வகையில், ஏற்கனவே தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக ரூபாய் 10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதையொட்டி, தமிழ்நாடு நாடாளுமன்ற, சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் தங்களது ஒருமாத ஊதியத்தை இலங்கை தமிழர்களின் துயரை போக்கிடும் வகையில் நிதியுதவி அளிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

 

கே.எஸ். அழகிரி