20-Nov-2024
அறிக்கை
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டைக்கு அருகில் உள்ள மல்லிப்பட்டினம் அரசு உயர்நிலைப் பள்ளியில் தற்காலிக தமிழாசிரியையாக பணியாற்றிய ரமணி அவர்கள், இன்று காலை பள்ளியின் வராண்டா பகுதியில் இளைஞர் மதன் என்பவரால் பகிரங்கமாக பல பேர் முன்னிலையில் கத்தியால் குத்தப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. இத்தகைய கொடிய கொலைவெறி சம்பவம் நடந்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.
இந்த கொடிய சம்பவம் உயர்நிலைப் பள்ளி வளாகத்திற்கு உள்ளேயே பலபேர் முன்னிலையில் நடந்திருப்பது மிகுந்த வேதனையைத் தருகிறது. இத்தகைய கொலைவெறி தாக்குதல் நடத்துவதற்கு இளைஞர்கள் மத்தியில் எப்படி துணிச்சல் வருகிறது என்று தெரியவில்லை. இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும்.
இதுபோன்ற இடங்களில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். எனவே தீவிரமான நடவடிக்கைகளை எடுக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.
இதுபோன்ற இடங்களில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். எனவே தீவிரமான நடவடிக்கைகளை எடுக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.
படுகொலை செய்யப்பட்ட ஆசிரியை ரமணியின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், படுகொலை செய்யப்பட்ட ஆசிரியை ரமணியின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டுத் தொகையையும், தகுந்த பாதுகாப்பையும் வழங்க வேண்டுமென தமிழக முதலமைச்சரை கேட்டுக் கொள்கிறேன்.
தலைவர் கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ
தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ