அறிக்கை | 10 Dec 2021
முப்படைகளின் தலைமைத் தளபதி திரு. பிபின் ராவத், அவருடைய மனைவி திருமதி. மதுளிகா ராவத் ஆகியோரது உடல்களுக்கு திரு ராகுல்காந்தி மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். பிபின் ராவத் அவர்களின் சேவையை இந்த நாடு ஒருபோதும் மறவாது. உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு திரு ராகுல்காந்தி ஆறுதல் கூறினார்.
“இந்த கையேட்டில் எழுதப்பட்டுள்ள வார்த்தைகள் அனைத்தும் உணர்வுகள். கடினமான இந்த நேரத்தில் மனதில் ஏற்படும் உணர்வுகள்” – இந்த நாட்டின் மகனான முப்படைத் தளபதி பிபின் ராவத் அவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் திரு.ராகுல்காந்தி எழுதிய செய்தி.