மத்திய அரசு அனுமதி மறுத்ததால், டிசம்பர் 12 ஆம் தேதியன்று தற்போது பேரணி நடைபெறுகிற இடம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு மாற்றப்பட்டுள்ளது. – தலைவர் திரு கே எஸ் அழகிரி

அறிக்கை | 02 Dec 2021

மத்திய பா.ஜ.க. ஆட்சியில் விலைவாசி உயர்வு, பணவீக்கம், வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவற்றை கண்டிக்கின்ற வகையில், மாபெரும் பேரணியை வருகின்ற டிசம்பர் 12 ஆம் தேதி தலைநகர் தில்லியில் ராம்லீலா மைதானத்தில் நடத்துவதென ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்கு மத்திய அரசு அனுமதி மறுத்ததால், தற்போது பேரணி நடைபெறுகிற இடம் அதேநாளில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு மாற்றப்பட்டுள்ளது.

எனவே, தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியினர் பேரணியில் கலந்து கொள்வதற்கு 12 ஆம் தேதி ஜெய்ப்பூர் செல்ல வேண்டுமென்பதால் அதற்குரிய ஏற்பாடுகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

(கே.எஸ். அழகிரி)