3 கொடூரமான வேளாண் சட்டத்துக்கு எதிராக உறுதியுடன் விவசாயிகள் நடத்திய போராட்டம் காரணமாக திரும்பப் பெறப்பட்டுள்ளது. எனவே, 2021 நவம்பர் 20 ஆம் தேதியை விவசாயிகள் வெற்றி தினமாக இந்திய தேசிய காங்கிரஸ் கடைப்பிடிக்கும். தலைவர் திரு கே எஸ் அழகிரி

அறிக்கை | 19 Nov 2021
கொடூரமான 3 வேளாண்மை சட்டங்கள் திரும்பப் பெறுவதாக அறிவிக்கப்பட்டிருப்பது, நமது விவசாயிகளின் போராட்டத்துக்கும், அவர்களது தியாகத்துக்கும், இந்த சட்டங்களை எதிர்த்துப் போராடிய நமது தலைவர் ராகுல் காந்திக்கும், காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளுக்கும் கிடைத்த வெற்றி.
இந்த ஒட்டுமொத்த வெற்றியை நம் நாட்டுக்கு அன்னமிடும் விவசாயிகளுக்கு சமர்ப்பிப்போம். இந்த 3 கொடூரமான வேளாண் சட்டத்துக்கு எதிராக உறுதியுடன் விவசாயிகள் நடத்திய போராட்டம் காரணமாக திரும்பப் பெறப்பட்டுள்ளது. எனவே, 2021 நவம்பர் 20 ஆம் தேதியை விவசாயிகள் வெற்றி தினமாக இந்திய தேசிய காங்கிரஸ் கடைப்பிடிக்கும்.
இதனைக்கருத்தில் கொண்டு நாம் ஏற்பாடு செய்ய வேண்டிய நிகழ்ச்சிகள்:
1. விவசாயிகளின் வெற்றியை நாடே இணைந்து கடைப்பிடிக்க வேண்டும்.
2. விவசாயிகளின் போராட்டத்துக்குக் கிடைத்த இந்த வெற்றியைக் குறிக்கும் வகையில், உயிர்த் தியாகம் செய்த விவசாயிகளின் குடும்பத்தாரின் வீடுகளுக்குச் செல்ல வேண்டும்.
3. நமது 700 விவசாயிகள் உயிர்த்தியாகம் செய்தபின், தாமதமாக இந்த 3 சட்டங்களையும் திரும்பப் பெறுவது குறித்து அரசை நோக்கி கேள்வி எழுப்ப வேண்டும்.
4. விவசாயிகள் போராட்டத்தில் உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த வேண்டும்.
விவசாயிகளுக்குக் கிடைத்த வெற்றி குறித்தும், இதற்காக போராடிய நமது தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் குறித்தும் எடுத்துரைக்க மாநில காங்கிரஸ் கமிட்டி, மாவட்ட காங்கிரஸ் கமிட்டி, வட்டார அளவில் பத்திரிக்கையாளர் சந்திப்பை உடனடியாக நடத்த வேண்டும்.
நாளை 2021 நவம்பர் 20 ஆம் தேதி விவசாயிகள் வெற்றிப் பேரணி/ விவசாயிகள் வெற்றி கூட்டங்களை மாநிலம் மற்றும் மாவட்ட தலைமை அலுவலகங்களில் நடத்தி, விவசாயி வெற்றி தினத்தை கடைப்பிடிக்க வேண்டும்.
மெழுகுவர்த்தி பேரணி/ உயிர்த்தியாகம் செய்த 700 விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தும் பேரணியை இன்று இரவோ அல்லது நாளை இரவோ நடத்த வேண்டும்.
உங்கள் பகுதியில் போராட்டத்தில் பங்கேற்று உயிர்த் தியாகம் செய்த விவசாயியின் குடும்பத்தை, எவ்வளவு விரைவாகவே முடியுமோ நேரில் சந்திக்கவும்.
– கே.எஸ்.அழகிரி